Monday, July 24, 2017

சரஸ்வதியின் செல்வன்

1967யில் மேடையேறிய "சரஸ்வதியின் செல்வன்" சோவுடைய ஆகச் சிறந்த நாடகங்களில் ஒன்று. கேலி, கிண்டல், நையாண்டி - Cho at his best!

எழுத்தாளர் தாசானு தாசன் என்ற கதாபாத்திரம் சோவுக்கு. அவரைத் தவிர யாருமே இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாது. இன்றைய கால கட்டத்தின் சென்னை வட்டார மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சும்மா எல்லாரையும் வஞ்சனையில்லாமல் கலாய் கலாய் எனக் கலாய்த்திருப்பார்.

தாசானு தாசன் ஒரு சினிமா கதையைச் சொல்ல, அந்த அபத்தமான லாஜிக் இல்லாத கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கிறாள் சரஸ்வதி. அவர்கள் மூலம் தமிழ்க் கொலை புரியும் எழுத்தாளனுக்குப் புத்தி புகுத்த நினைக்கிறாள் சரஸ்வதி. அந்தப் பாத்திரங்கள் இவர் மீது கொலை வழக்கு போடுகின்றனர். அதிலிருந்து அவர் எப்படி தப்பி வருகிறார் என்பதே மீதி கதை.


சினிமாவுக்கு கதை எழுதுபவர்கள், அதில் நடிப்பவர்கள், தயாரிப்பவர்கள் எனச் சகட்டு மேனிக்கு அனைவரையும் கிண்டலடித்திருப்பார் சோ. இதே கதை சற்று விரிவாக "சரஸ்வதியின் சபதம்" என்ற பெயரில் 80களின் இறுதியில் தூர்தர்ஷனில் வெளியாகி, பல பிரபல கதாநாயக நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் வயிற்றெரிச்சலை கட்டிக் கொண்டது என்பது உபரித் தகவல்.

5 comments:

  1. அற்புதம். இந்த நாடகம் பற்றி இதுவே முதல் முறை கேள்விப்படுகிறேன். பார்க்க ஆவல். கதை மூல சிந்தனை அட்டகாசம்

    ReplyDelete
    Replies
    1. தூர்தர்ஷன் மனது வைத்தால்தான் முடியும்.

      Delete
  2. இத்தொடர் இணையத்தில் கிடைக்கவில்லை. சிடி வடிவில் உண்டா ?

    ReplyDelete
  3. Intha drama serialai dd channalil Sunday morningil parppen sema entertainment

    ReplyDelete
  4. Sunday morningil dd channalil parppen sema entertainment

    ReplyDelete