Friday, December 14, 2018

நேர்மை உறங்கும் நேரம்

சோ எழுதிய, இயக்கிய கடைசி நாடகம். 1981யில் மேடையேறியது. முகமது பின் துக்ளக்கைப் போல, முழு அரசியல் நாடகம். 2001யில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் எழுதப்பட்ட நாடகம். அவருடைய கற்பனை பல முறை உண்மையாகிவிட்டது. 2001க்கு முன்பாகவே இந்நாடகத்தில் சொல்லப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் அவ்வாறே நடக்கின்றன. இதுவும் சோவின் காலத்தால் அழியாத நாடகமாகிவிட்டது.

சிங்காரம் என்கிற ஆளுங்கட்சித் தலைவராக, துணை முதல்வராக சோ பேசும் வசனங்கள் அகதளம். அவருக்குச் சளைக்காமல் முதலமைச்சர் வேடத்தில் வரும் நீலு. முரடனாக அம்பி. மூவரும்  சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்கள். யாராவது கிட்டத்தட்ட அழிந்து விட்ட சென்னைத் தமிழை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் சோவுடைய நாடகங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் இந்த நாடகத்துக்குச் சிறப்பான இடம் உண்டு.

முதல்வர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார் சிங்காரம். முதல்வரைப் போலவே தோற்றம் கொண்ட ராஜு என்ற ஆசாமியைப் பழக்கி ஆள் மாறாட்டம் செய்கிறார். சின்னையன் என்கிற முரடன் நடுவில் புகுந்து ராஜூவை மிரட்டி, ஒரு எம்.எல்.ஏ. ஆகி விடுகிறான். அவன் நல்ல பெருமாள் என்கிற கல்லூரிப் பேராசிரியரை முதல்வருக்கு அறிமுகப்படுத்துகிறான். அந்த படித்தவரின் ஆலோசனைகள் மூலம் நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். அதைப் பிடிக்காத சிங்காரம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார். பணத்தால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார் முதல்வர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, தாமே முதல்வராக வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவிழ்த்து விடுகிறார். ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க எண்ணும் முதல்வர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் கல்லூரி ஆசிரியரை முதல்வராகப் பதவி ஏற்று நாட்டுக்கு நல்லது செய்யச் சொல்கிறார். ஆலோசனைகள் மட்டுமே சொல்லிப் பழகி விட்ட அந்த மேதாவி, செயலில் இறங்க தயங்குகிறார்; முதல்வராகும் யோசனையை ஏற்க மறுக்கிறார். அவரைத் திட்டித் தீர்க்கும் முதல்வர் சிங்காரத்திடமே சரணடைகிறார். இருவரும் மீண்டும் இணைகின்றனர். நேர்மை நீண்ட உறக்கம் கொள்கிறது.

டீக்கடையில் அரசியல் வெட்டிப்  பேச்சு பேசுபவர்கள், அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்த்து அவர்கள் நேரில் வந்தால் வளைந்து கொடுப்பவர்கள், நேர்மையாக இருந்து அரசியலில் சேர்ந்தவுடன் பணத்தாசை கொள்பவர்கள், தினம் பேப்பர் படித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் நாடு உருப்படாது எனச் சாபமிடுபவர்கள், யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் என நாம் தினம் தினம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நாடகத்தில் பாத்திரங்களாக்கி உள்ளார் சோ.

போலியான கடவுள் மறுப்புக் கொள்கை, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம், கள்ளச் சாராயப் பிரச்சினை, தாய்க்குலம், உடன் பிறப்பு போன்ற வாசகங்கள், குதிரைப் பந்தைய ஒழிப்பு எனச் சகலத்தையும் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

நியாயமாக, இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே ரசிக்கத்தக்கது. ஆனால் எல்லாவற்றையுமே இங்கே தொகுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதியைப் பார்த்து பேசும் வசனங்கள் - "என்ன சார் இது? உங்க வீட்ல நாலு பேர் இருக்காங்க. ரெண்டு ஃபிரிட்ஜ் தான் இருக்குங்கிறீங்க. எப்படி சமாளிக்கிறீங்க? சிம்பிளா இருக்கலாம். அதுக்கு ஒரு லிமிட் இல்லை? ரெண்டே ரெண்டு ஃபிரிட்ஜ் வைச்சுக்கிட்டு சாமியார் மாதிரியா இருக்கறது? "

ஒரு கட்சிக்காரரைப் பார்த்து - "உன் கட்சி பத்திரிகை  தானே? படிக்கிறேன் கேள். புலியே புறப்படு! சிங்கமே ஓடி வா! காளையே எழுந்திரு! இவங்க மனுஷனுக்கு நடத்தலை பத்திரிகை."

"எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட். இவனுக்கெல்லாம் ஓட்டு போடறதை விட குப்பைத் தொட்டியில் போடலாம். அதாவது ஆட்சிக்கு வந்து நம்மளை தொந்தரவு பண்ணாது."

"கடவுள் நம்பிக்கை இல்லாத சி.எம்.யா நீ. இப்படி முருகா முருகான்னு சொல்லக்கூடாது. அதெல்லாம் பாத்ரூம்லே ரகசியமாச் சொல்லிக்கணும். பப்ளிக் எதிரிலே தாய்தான் தெய்வம்."

"விஞ்ஞானிகள் மாநாடு நேத்து நடந்தது இல்லே? நான்தான் தலைமை வகிச்சேன்...என்னா பேசறதுன்னே புரியலை...கடைசியிலே விஞ்ஞானிங்க சேவை நாட்டுக்குத் தேவை...திருவள்ளுவரே ஒரு விஞ்ஞானிதான்னேன்  திருவள்ளுவரைப் பத்தி நாம என்ன சொன்னாலும் ஓ.கே. தான். திருவள்ளுவர்னா எல்லாரும்  உடனே பயந்து போய் கப்புனு வாயைப் பொத்திக்கிறானுங்க. ஏதோ போனாப் போகுதுன்னு திருவள்ளுவரோடு விட்டேன். விஞ்ஞானிகள் தெருக்கூத்து நடத்தி, அறிவை வளர்க்க வேணும்னு சொல்லலாமான்னு பார்த்தேன்."

Saturday, December 8, 2018

ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்ட்

சோ எழுதி இயக்கிய நல்ல நாடகங்களில் ஒன்று. 1977யில் மேடையேறியது. இதை அவருடைய ஆகச் சிறந்த நாடகம் எனச் சொல்ல முடியாது.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு சமூகச் சேவகி, ஒரு கல்லூரிப் பேராசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு சினிமா டைரக்டர்  ஆகியோர் முயல்கிறார்கள். அவர்கள் நாடும் வக்கீல் அந்த ஆண் சில ஆண்டுகளுக்கு முன் தம்முடைய பெண்ணின் மானத்தைக் காத்தவன் என்பதால் அவன் இத்தவற்றைச் செய்திருக்க மாட்டான் என நம்புகிறான். ஆனால் அந்த ஆளே குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறான்.

வக்கீலுடைய மகள் குடும்ப மானம் பறி போகும் என்பதால் தந்தை பேச்சைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மறுத்து விடுகிறாள். அதனால் மனம் வெறுத்துப் போகிறான்  வக்கீல். தவறு செய்திருந்தாலும் அந்த ஆசாமியைக் காப்பாற்ற தீர்மானிக்கும் வக்கீல் சமூகம், பத்திரிகை, சினிமா போன்றவற்றின் மீது பழி சுமத்தி அவனை விடுவிக்க முடிவு செய்கிறான்.

வக்கீல் பிறகு அப்படிச் செய்வது சரியாக இருக்காது எனத் தீர்மானிக்கிறான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வாங்குகிறான்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்காகச்  சமூகச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்கிறாள். இந்தக் கதையை எழுதி பிரசுரித்துப் பணம் பண்ணுகிறார் பத்திரிகையாளர். சினிமா இயக்குனர் இக்கதையைப் படமாக்கி பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இப்படி எல்லாருமே பணம் அல்லது பதவிக்காக அப்பெண்ணுக்கு உதவுவதைப் போல நடிக்கிறார்கள். யாருமே அப்பெண்ணின் கதி என்ன என்பதை யோசித்துக் கூட பார்ப்பதில்லை. குற்றம் செய்தவன் பணம் வாங்கிக் கொண்டே (சினிமா இயக்குனரிடமிருந்து) குற்றத்தை ஒப்புக் கொள்கிகிறான். அவன் தப்பித்துக் கொண்டால் கதையில் சாரம் இருக்காது என இயக்குனருக்குப் பயம்.

வக்கீல் குமாஸ்தா ஜெகதீஷாக சோ. நக்கல் பிடித்த கேரக்டர். தம்முடைய நகைச்சுவையான ஆனால் கூரிய வசனங்களால் மற்ற கதாபாத்திரங்களின் அவலங்களைச் சாடுகிறார். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலமே சோ பேசும் வசனங்கள். போலியான சமூகச் சேவகர்கள், மற்றவர்களின் துன்பத்தை வெட்கமோ பரிதாபமோ இல்லாமல் பணம் செய்யும் கதாசிரியர்கள் மற்றும் சினிமாக்காரர்கள், தம்முடைய மகன் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை தம்முடைய பெயர் கெடக் கூடாது என நினைக்கும் தந்தைமார்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சோ இந்நாடகத்தின் மூலம் சாடுகிறார்.

ஆனால் மற்ற பாத்திரங்கள் பேசும் வசனங்கள் சொல்லும்படியாக இல்லை. குறிப்பாக குற்றம் செய்தவனுடைய தந்தை மற்றும் கல்லூரிப் பேராசிரியர் ஆகியோருடைய பாத்திரங்கள் சரியாக அமைக்கப் படவில்லை.

எத்தனை உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் சினிமாவாகவும் வருகின்றன. அவற்றை எழுதுபவர்களுக்கும்  இயக்குபவர்களுக்கும் அச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். அதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களே காசை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய கதையை விற்பதையும்  பார்க்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சோ எழுதிய இந்நாடககத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அவலங்கள் இச்சமூகத்தில் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவை.

Friday, December 7, 2018

காதலா காதலா

1990க்குப் பிறகு நடிக்காமல் இருந்த சோ, திரைத்துறையில் நடந்த சச்சரவில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்க அவருடைய படத்தில் தாமாகவே சான்ஸ் கேட்டு சோ நடித்த படம். இதுதான் அவர் நடித்த கடைசிப் படம். கெளரவ வேடம்தான். வக்கீல் வரதாச்சாரியாக அவர் தோன்றும் காட்சிகள் கலகல. ஆனால் படம் முழுக்கவே நகைச்சுவை தான் பிரதானம். சோ தோன்றும் காட்சிகளை விட நகைச்சுவையில் பிற நடிகர்கள் கலக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

கமல் - பிரபு தேவா கூட்டணியில் உருவான சிறந்த நகைச்சுவைப் படம். கதை என்று பெரிதாக எதுவுமில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, நாகேஷ், கோவை சரளா, செளந்தர்யா, ரம்பா, கிரேசி மோகன், நீலு, மெளலி என அனைவருமே நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

இப்படம் வெளியான தேதி 14 ஏப்ரல் 1998. இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்.

பாலம்

கார்வண்ணன் இயக்கத்தில் 10 மார்ச் 1990யில் வெளியான இப்படத்தில் முரளி, கிட்டி, நம்பியார், செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். 

தனது குடும்பத்தைச் சின்னாபின்னப்படுத்திய அமைச்சரை நாயகன் ஒரு பாலத்தில் கடத்தி வைத்திருப்பதே கதை. கடைசியில் போலீசாரால் சுட்டு கொல்லப்படும் நாயகன், தான் சாவதற்கு முன்பாக அமைச்சரைச் சுட்டு கொல்கிறான்.

சோ இப்படத்தில் சோவாகவே நடித்துள்ளார். ஒரே காட்சி. நாயகன் ஓர் அமைச்சரைக் கடத்த, அதைப் பற்றி சோவிடம் தொலைக்காட்சியில் கருத்து கேட்க, அவர் தமது சொந்தக் கருத்தைச் சொல்வார். சட்டத்தைக் கையிலெடுப்பது தவறு என்ற ரீதியில் சோவின் கருத்து அமைந்திருக்கும்.இவரைப் போலவே டாக்டர் ராமதாசும் தோன்றி தமது சொந்தக் கருத்தைச் சொல்வார்.

உலகம் பிறந்தது எனக்காக

14 ஏப்ரல் 1990யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சோ நாயகனுடைய தந்தையாக வருகிறார். அங்குமிங்குமாக அரசியலைத் தாக்குகிறார். மனோரமா ஜோடி. பெரிதாகச் சொல்லும்படி எதுவுமில்லை. சோ இந்த வேடத்துக்குத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.

வழக்கமான நாயகன் இரு வேடங்களில் தோன்றி ஆள் மாறாட்டம் செய்யும் மசாலாப் படம். சத்யராஜ், கெளதமி, ரூபிணி, சரண்யா, திலீப், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில், ஜெய்கணேஷ், டிஸ்கோ சாந்தி எனப் படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம். மிகவும் சுமாரான  படம். 

அதிசயப் பிறவி

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சோ நடித்திருக்கவில்லை என்றால் ரசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. சோ தோன்றும் காட்சிகளைத் தவிர படம் சுத்த அறுவை. இப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த். அவருடைய ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லை என்பதால்தான் வெற்றி பெறவில்லை.

சித்திரகுப்தனின் தவறான கணக்கால் நாயகனின் உயிர் பிரிந்து விட, அதனால் அவன் எம லோகத்தில் அட்டகாசம் செய்கிறான். யமன் அவனுக்குத் துணையாக விசித்திரகுப்தனை அனுப்புகிறான். விசித்திரகுப்தனின் உதவியால் தன்னைப் போலவே உள்ள உருவத்தின் உடலில் நாயகன் புகுந்து விடுகிறான். பின் அதனால் தோன்றும் குழப்பங்களும் அவற்றை எப்படி அவன் சமாளித்தான் என்பதுமே கதை.

எமனாக வினுசக்கரவர்த்தி, சித்திரகுப்தனாக வி.கே.ராமசாமி, விசித்திரகுப்தனாக சோ. காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? அரசியலை அவ்வப்போது  தாக்கி சோ அகத்தளம் செய்கிறார்.

கனகா, ஷீபா, நாகேஷ், ஜெய்கணேஷ் போன்றோரும் படத்தில் உண்டு. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இப்படம் 15 ஜூன் 1990யில் வெளிவந்தது. 

குரு சிஷ்யன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 13 ஏப்ரல் 1988யில் வெளியான இப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த நல்ல படம். வில்லன் ரவிச்சந்திரனுடைய பார்ட்னராக சோ தோன்றுகிறார். நகைச்சுவை வில்லன் வேடம் அவருக்கு. எம்.ஜி.ஆர். மறைந்து நான்கு காட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட நேரம். சோவுக்குச் சொல்லவா வேண்டும்? அரசியலை வெளுத்து வாங்குகிறார். படம் முழுக்க அவர் யோசிக்கும் போது கைகளை உதய சூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களைக் காட்டி எதுவும் உருப்படாது என்பதை அவர் பாணியில் சைகை காட்டுவார். அரசியல் புரியும் ரசிகர்கள் இக்காட்சிகளைக் காணும் போதெல்லாம் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள்.

ரஜினிகாந்த் - பிரபு நாயகர்கள்; வழக்கமான பழி வாங்கும் மசாலாக் கதை; ஆனால் சண்டை, பாடல் காட்சிகளைத் தவிர நகைச்சுவையே பிரதானமாக உள்ளதால் எல்லாரும் விரும்பும் படமாக இது அமைந்து விட்டது. கெளதமி அறிமுகமான படம். சீதா, வினு சக்கரவர்த்தி, பாண்டியன், ராதாரவி, செந்தாமரை, மனோரமா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் அருமையான பாடல்கள். 

Wednesday, December 5, 2018

ஆனந்த்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 ஆகஸ்ட் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோ நாயகனுக்கு அப்பாவாக வருகிறார். நகைச்சுவை மற்றும் சீரியஸ் கலந்த வேடம். நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக உள்ளன. அரசியல் சார்ந்த வசனங்களும் உண்டு. அவருக்கு ஜோடியாக செளகார் ஜானகி.

பிரபு பாடகர்; அவரும் ராதாவும் பரஸ்பரம் காதலிக்கின்றனர். ஒரு மொட்டைக் கடிதத்தைப் பார்த்து ராதாவைப் பற்றி பிரபு விசாரிக்கிறார். அதை அறியும் ராதா அவரை விட்டுப் பிரிந்து விடுகிறார். வில்லன் சிவசந்திரனை மணந்து கொள்கிறார். மனம் வாடி எதிலும் பற்றில்லாமல் தவிக்கிறார் பிரபு. சில பல திருப்பங்கள். கடைசியில் வில்லனால் பிரபு கொல்லப்பட, தன்னுடைய கணவனையே கொன்று பழி தீர்த்துக் கொள்கிறார் ராதா.

வெண்ணிறாடை மூர்த்தி, ஒய். ஜி. மகேந்திரன், ஜெயஸ்ரீ போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Tuesday, December 4, 2018

மனிதன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 21 அக்டோபர் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு அவர் இஷ்டம் போல அரசியல் பேச நல்ல வாய்ப்பு. அரசியலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வினு சக்கரவர்த்திக்கு ஓட்டு சேகரிக்கும் கதாபாத்திரம் என்பதால் சோவுடைய அரசியல் காமெடிக்கு இப்படத்தில் பஞ்சமில்லை. அவர் தோன்றும் எல்லாக் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. புரோக்கர் பொன்னம்பலம் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர்.

அமாவாசையில் பிறந்ததால் திருடன் பட்டம் கட்டப்படும் சிறுவன், சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வெளியே வருகிறான். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான்; ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குகிறான்; வில்லன்களைப் பந்தாடுகிறான். வழக்கமான 80களின் மசாலாப் படம்.

ரஜினிகாந்த், ரூபிணி, சோ, ரகுவரன், விணுசக்கரவர்த்தி, செந்தில், ஜெய் கணேஷ், மாதுரி, ஸ்ரீ வித்யா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உள்ளது.

சந்திரபோஸ் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். 

Monday, December 3, 2018

இனிய உறவு பூத்தது

1987யில் வெளியான இப்படத்தை  ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.  பல பெண்கள் பின்னால் சுற்றி அலையும் நாயகனைத் திருமணம் செய்து கொண்டு, அவனைத் திருத்தும் நாயகியின் கதை.


ஸ்ரீதருடைய சுமாரான படங்களில் இதுவும் ஒன்று.

சுரேஷ், நதியா, எஸ்.வி.சேகர், செந்தில், கோவை சரளா போன்றோருடன் சோவும் நடித்திருந்தார்.  கதாநாயகனான சுரேஷுடைய தந்தையாக சோ நடித்துள்ளார். குணச்சித்திரப் பாத்திரம். மருந்துக்குக் கூட நகைச்சுவை வசனமோ சோவின் டிரேட்மார்க் அரசியல் வசனமோ கிடையாது.

சின்னக் குயில் பாடுது

பி.மாதவன் இயக்கத்தில் 1 மே 1987யில் வெளியான படம். சுவாரசியமான கதை, தேர்ந்த திரைக்கதை, நடிகர்களின் சிறப்பான  நடிப்புடன் கூடிய நல்ல படம்.

இப்படத்தில் சோ, ராமசாமி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடி கிடையாது. சிறிய வேடம். சிவகுமார் அலுவலகத்தில் வேலை செய்பவராக வருகிறார். நகைச்சுவை நன்றாக இருந்தாலும், ஓரிரண்டு காட்சிகளில் அரசியல் பேசினாலும், இது சோவுடைய பெயர் சொல்லும் படமில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கக் கூடிய வேடம்தான்.

மனைவியை இழந்த நாயகன் மகனுக்காக மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு மணமான விஷயம் பிறகே அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட, இருவரையும் சேர்த்து வைக்க பிற கதாபாத்திரங்கள் செய்யும் முயற்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே மீதிக்  கதை.

பாக்யராஜ் தனி ட்ராக்கில் வருகிறார். தனிக் கதை - அவரே எழுதியுள்ளார்; மூலக் கதையுடன் சற்றும் தொடர்பில்லை. நல்ல கலகலப்பான காட்சிகள்.

சிவகுமார், அம்பிகா, இளவரசி, ஜீவிதா, சோ, மனோரமா, செந்தில், பாக்கியராஜ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் சிறந்த பாடல்களும் உண்டு. 

Friday, November 30, 2018

கண்ணத் தொறக்கணும் சாமி

தாசரி நாராயணராவின் மூலக்கதைக்குத் திரைக்கதை-வசனம் எழுதியவர் பாக்யராஜ். இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து இசையமைத்த படம். ஆர்.கோவிந்தராஜ் இயக்கம். 14 ஏப்ரல் 1986யில் வெளியானது.

சோவுக்கு வேணு என்ற கதாபாத்திரம்; சிவகுமாருடைய நண்பராக வருகிறார். படம் முழுக்க தோன்றும் பாத்திரம். ரஜனி சோவுக்கு ஜோடி. நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. அரசியல் வசனங்களையும் அவ்வப்போது சோ அள்ளி வீசி நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

வேலை தேடி பட்டணம் வரும் சிவகுமார், வீடு வாடகைக்குக் கிடைக்க ஜீவிதாவுடைய போட்டோவை ஒரு கடையிலிருந்து வாங்கி, தம்முடைய மனைவி எனப் பொய் சொல்லி வீட்டை மனோரமாவிடமிருந்து வாடகைக்கு வாங்குகிறார். இதன் காரணமாக ஜீவிதாவுடைய  திருமணம் நின்று போகிறது. அவர் சிவகுமார் வீட்டுக்கே வந்து அவருடைய மனைவி என உரிமை கொண்டாடுகிறார். சிவகுமார் எதுவம் செய்ய முடியாமல் தவிப்பதே படத்தின் மிகப் பெரிய பகுதி. வில்லன்கள்-சண்டை-ஜீவிதா சிவகுமார் சேர்ந்து வாழ்தல் எனச் சுபமாகப் படம் முடிகிறது.

நல்ல கலகலப்பான படம்; சிறிது கூட அலுக்கவில்லை.

தலையணை மந்திரம்

ஆகஸ்ட் 15, 1984யில் வெளியான இப்படத்தை என். வெங்கடேஷ் இயக்கியிருந்தார். பாண்டியன், சுலக்ஷனா, சோ, வடிவுக்கரசி, செந்தில், வி.கோபாலகிருஷ்ணன்  போன்றோர் நடித்துள்ளனர்.


சோவுடைய தேவையற்ற படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் இவருக்கு அரசியல் வசனங்கள் இல்லை; நகைச்சுவையும் சொல்லும்படியாக இல்லை. படம் முழுக்க வருகிறார். சபலப் புத்தியுள்ளவர் பாத்திரம். கிருஷ்ணன் எனப் பெயர். நாயகனுடைய தந்தை. வடிவுக்கரசி ஜோடி. இவர்தாம் ஒரு இளம் பெண்ணுடைய தந்தை என நம்பும்படி நகரும் கதையின் முடிவில் இவருடைய நண்பர்தாம் அப்பெண்ணுடைய தந்தை என்பதை அனைவருக்கும் உணர்த்தி, அப்பெண்ணின் தடைப்பட்டிருந்த திருமணத்தை நடத்தி வைப்பார் சோ.

படம் அறுவையிலும் அறுவை. கணவனைச் சந்தேகப்படும் மனைவி கணவன் உத்தமன் என்பதைக் கடைசியில் உணரும் கதை. 

உள்ளம் உருகுதடி

மே 18, 1984யில் வெளியான இப்படத்தை ஈரோடு என். முருகேஷ் இயக்கியிருந்தார். சுரேஷ், விஜி போன்றோருடன் சோவும் நடித்திருந்தார். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்காததால் மேற்கொண்டு தகவல்கள் தர இயலவில்லை.

Thursday, November 29, 2018

சாதல் இல்லையேல் காதல்

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் சோ எழுதிய நாடகம் இது. இவருடைய மற்றைய நாடகங்களில் உள்ள சமூகச் சீர்திருத்தக் கருத்தோ, அரசியல் நையாண்டியோ இதில் கிடையாது. லாஜிக் எதுவும் பார்க்காமல் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டுமென்றால் இந்நாடகத்தைப் படிக்கலாம்.

இந்த நாடகத்தைக் கல்கி இதழில் தொடர்கதையாகச் சோ எழுதினார். 1964யில் இதை இவர் எழுதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்த நாடகத்தை சோ மேடையேற்றவேயில்லை. பல வருடங்களுக்குப் பிறகு எஸ்.வி.சேகர் இதை மேடையேற்றினார்.

நாகராஜன் என்ற கல்லூரி மாணவன் மனம் போன போக்கில் எதையோ கிறுக்க, அதைப் பெரிய கவிதை என நம்பும் மாலதி என்ற மாணவி அவனைக் காதலிக்கிறாள். இரண்டு மாதங்களில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தால் மட்டுமே பெண்ணைக் கொடுப்பேன் என மாலதியுடைய சிற்றப்பா நிபந்தனை விதிக்கிறார்.

நாகராஜனுடைய நண்பன் சுரேஷ் அவனைத் தன்னுடன் பம்பாய்க்கு அழைத்துப் போகிறான். நாகராஜன் இறந்து விட்டதாக பொய்யான விளம்பரம் கொடுத்து, அவனை அவனுடைய தம்பியாக நடிக்க வைக்கிறான். இப்படி ஆள் மாறாட்டம் செய்து பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் செய்யும் முயற்சியும், அதனால் ஏற்படும் குழப்பங்களும், நாகராஜன் தான் சொன்ன பொய்யால் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடுவது எனக் கதை நீளுகிறது. முழுவதும் காமெடி கலாட்டா.

கல்லூரி மாணவர்களின் செய்கைகள், கவிஞர்கள் எதையோ கிறுக்கி கவிதை எனச் சாதிப்பது, இளைஞர்களின் வெளிநாட்டு நாகரீக மோகம், இப்படி பல விஷயங்களையும் தமக்கே உரிய நகைச்சுவையுடன் விளாசித் தள்ளுகிறார் சோ.

Tuesday, November 13, 2018

சாத்திரம் சொன்னதில்லை

சோவின் தலை சிறந்த நாடங்களில் ஒன்று. 1980யில் மேடையேறிய நாடகம்.

இது அரசியல் நாடகம் இல்லை. ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றிய சமூகப் பிரச்சினையின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம்.

சாரியார் என்ற பிராமணர் ஜாதிப் பாகுபாடு கூடாது என எல்லோருக்கும் சொல்லி வருவார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பையனும், வேறொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலிக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்க இருவருடைய பெற்றோர்களுடனும் பேசிவிட்டு வருவார். இவரைச் சோதிக்க வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஒருவர், இவருடைய மகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனும் ஒரே நாளில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த உண்மையை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும் மாறி விட்டதாகக் கதை கட்டிவிடுவார். அதை உண்மை என நம்பும் சாரியார் அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தம்முடைய மக்கு மகனை வைய ஆரம்பிப்பார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனைக் கொண்டாடுவார். ஒரு கட்டத்தில் அந்தத் திருமணம் நின்று விட, மனம் மகிழ்வார்; தம்முடைய மகன் இல்லை என அவர் நம்பும் தம்முடைய மகனுக்கே, அப்பெண்ணை மணமுடிக்க சம்மதிப்பார். அவர் பேசிய தர்ம நியாயங்கள் அவருடைய செய்கையில் இருக்காது. நியாய தர்மங்கள் பேசுபவர்கள் தமக்கு என்று வந்தால் வேறு விதத்தில் நடந்து கொள்வார்கள் என்பதே நாடகத்தின் மையக் கருத்து. கடைசியில், அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் இறந்து விட, அவன் தம்முடைய மகன் இல்லை என்ற உண்மை தெரிந்தும், அவனுக்காகக் காரியங்கள் செய்வார் மனம் திருந்திய சாரியார். 

Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

Tuesday, November 6, 2018

வந்தே மாதரம்

மஹாத்மா காந்தி, கௌடில்யர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோருக்கும் சோ எழுதி இயக்கிய வந்தே மாதரம் என்ற இந்த நாடகத்துக்கும் தொடர்பு உண்டு. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.

1975யில் மேடையேறிய இந்நாடகம் அதற்கு முன்பாகத் துக்ளக் இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னுரையில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சம்ஸ்க்ருத வாக்கியங்களும் அதன் மொழிபெயர்ப்பும் இடம் பெறும். அவை அந்த அத்தியாயத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வாக்கியங்கள் எதுவுமே கௌடில்யருடையது இல்லை. எல்லாமே சோவின் வார்த்தைகள். அதை தொடர் முடிந்தவுடன் சோ வெளியிட்டார். தாம் சொல்லும் நல்ல விஷயங்களை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் கௌடில்யர் பெயரில் வெளியிட்டதாக தம்முடைய பாணியில் எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பல மாதங்களாக வெளிவந்த இந்தத் தொடர் முடியும் வரை இதைப் படித்தவர்கள் யாரும் இந்த வாக்கியங்கள் அர்த்த சாஸ்திரத்தில் கிடையாது என்பதை அறியவில்லை.

பாஸ்கரன் என்ற மிகவும் திமிர் பிடித்த ஆனால் மேதாவியான பாரிஸ்டர் வேடத்தில் சோ. குடிகாரர்; யாரையும் சிறிது கூட மதிக்காதவர்; பணத்தாசை இல்லாதவர்; நல்லவர் எனப் பல கலவைக்குணம் கொண்டவர். சார்லஸ் டிக்கன்ஸின் "டேல் ஆ ஃப் டூ சிட்டீஸ்" என்ற கதையில் தோன்றும் ஸிட்னி கார்ட்டன் என்ற பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்தப் பாத்திரம்.

ஆர்யா என்ற பாஷ்யம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அவர் தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறியவர். அவருடன் சோவுக்கு நட்பு இருந்தது. அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் சில இடங்களும், சம்பவங்களும் இந்தக் கதையில் அமைக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் அவனுடைய நண்பர்களும் முதலில் தீவிரவாதிகளாக இருந்து காந்தியவாதிகளாக மாறுவதும் கவனிக்கத் தகுந்தது. நாயகனுடைய நண்பன் பெயரும் பாஷ்யம்.

கதா நாயகன் சுந்தரம், பாஷ்யம் மற்றும் தமிழ் வாத்தியார் சம்பந்த மூர்த்தி ஆகியோர் பாரதியாரைக் கடற்கரையில் சந்திக்கின்றனர். அவர் மூலம் மேலும் உத்வேகம் அடைவதாக ஓர்  அத்தியாயம். இப்படியாக பாரதியாரையும் தம்முடைய கதையில் ஒரு பாத்திரமாகி விட்டார் சோ.

1910களின் கடைசியில் நகரும் கதைக்களம். ஜனார்த்தனம் என்ற நேர்மையான  போலீஸ் அதிகரியுடைய மகன் சுந்தரம், தன்னுடைய கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்புகிறான். அதை விரும்பாத அவனுடைய தந்தை அவனைத் தடுத்துப் பார்க்கிறார்; கைது செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் நன்றிக்கெட்டத் தனத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.

 சுந்தரத்துடைய காதலி சுமதி. அவள் மீது ஒரு சமயத்தில் மையல் கொள்ளும் புகழ் பெற்ற குடிகார, திமிர் பிடித்த வக்கீல் பாஸ்கரன் ஒரு முறை ஒரு வழக்கிலிருந்து சுந்தரத்தைக் காப்பாற்றுகிறான்.

சுந்தரமும் நண்பர்களும் குண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கின்றனர். அதில் ஆங்கிலேயர்கள் பயணிப்பார்கள் என்பது அவர்களுடைய அனுமானம். ஆனால் இந்தியர்கள் பயணிக்கின்றனர். ரயில் கவிழ்ந்து அவர்கள் அனைவரும் மரணமடைகிறார்கள். சுந்தரம் கைதாகிறான். சுமதிக்காக பாஸ்கரன் சுந்தரத்தை விடுவிக்க வாதாடுகிறான். ஆனால் சுந்தரத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கேஸ் தோற்று விடுகிறது. முடிவில் சுந்தரத்துக்குப் பதிலாகத் தானே ஆள் மாறாட்டத்தில் சிறை புகுந்து தூக்கு மேடை செல்கிறான் பாஸ்கரன்.

கதையில் இவர்களைத் தவிர பல சுவாரசியமானப் பாத்திரங்களும் உண்டு. ஆங்கிலேயரிடமும் பழகி, சுதந்திரத் தியாகிகளிடமும் பழகி, அங்கிருந்து விஷயங்களை இங்கே கசியவிடும் கலகலப்பான பத்திரிகையாளர் வேணு, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காண்டிராக்டர் வஜ்ரவேலு போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

பாஸ்கரன் மிகவும் சக்திவாய்ந்த பாத்திரம். கேலி, கிண்டல், நையாண்டி, அலட்சியம், திமிர், குடித்ததால் வரும் தள்ளாட்டம், மற்றவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் என மிகவும் ரசிக்கத்தக்க வேடம். சோவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

தொடர்கதைக்கும் நாடகத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கதையில் பாஸ்கரனும் சுந்தரமும் ஓரளவுக்குப் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள்; அதனாலேயே கடைசியில் சிறையில் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது. ஆனால் நாடகத்தில் அப்படி வரவில்லை. நாடகத்தில் பாஸ்கரன் தமிழ் ஆசிரியரிடம் மட்டும் மரியாதையுடன் பேசுகிறான்; இலவச பள்ளிக்கூடம் நடத்த பண உதவி செய்கிறான்; அது மூலக் கதையில் இல்லாதது. நாடகத்தில் தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறான் பாஸ்கரன்; அதனால் போலீசுக்கு யார் இறந்தது எனத் தெரியவில்லை. ஆனால் மூலக்கதையிலோ ஆள் மாறாட்டம் செய்து சுந்தரத்தின் இடத்தில் பாஸ்கரன் தூக்கில் தொங்குகிறான்.

இந்த மேடை நாடகம் திரைக்கதையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தொலைக்காட்சித் தொடராக 80களில் வந்தது. நாடகமும், தொலைக்காட்சித் தொடரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நாடகத்தின், குறிப்பாக பாஸ்கரன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. உதாரணத்துக்குச் சில -

"உங்களை மாதிரி ஆசாமிகளை விட குடி எவ்வளவோ பெட்டர். குடி உடம்பைத்தான் கெடுக்கும். உங்கள மாதிரி ஆசாமிங்க குடியையே கெடுப்பிங்க."

"மூளையை மறந்து காரியம் பண்ணா அதுக்கு தலையை மறைச்சுதான் ஆகணும்."

"உட்காருங்களேண்டா...தரைதான் விசாலமா இருக்கே...என்ன சாப்பிடறீங்க? குடிக்க விஸ்கியா பிராண்டியா?"

"வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க...நாடு சுதந்திரம் அடைஞ்சா நான் சொல்றது புரியும்."

"யாருக்குமே இடம் கொடுக்காதவங்களுக்காகத் தான் இந்த சமூகம் இடம் கொடுக்கும்."

"ஒரு தேசப் பக்தனுக்கு தேசத்துக்காக உயிர் விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்காக உழைப்பது முக்கியமா? தேசத்திடமிருந்தே விடுதலை வாங்கி சென்று விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்கே விடுதலை வாங்கித் தர உழைப்பது முக்கியமா?"



Friday, October 19, 2018

1970களில் சோ

1950களில் சோவின் நாடகப் பிரவேசம் நடந்தது. 1960களில்  அவர் மிகப் பெரிய நாடக ஆசிரியராக அறியப்பட்டார். அவருடைய திரைப்படப் பிரவேசமும் நடந்தது.

1970களில் அவர் மேலும் சில நாடகங்களை எழுதினார். பல்வேறு படங்களில் நடித்தார்.

 1970களில் சோவின் நாடகங்கள்

1) என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? - 1970
2) இன்பக் கனா ஒன்று கண்டேன் - 1971
3) சட்டம் தலை குனியட்டும் - 1972
4) யாருக்கும் வெட்கமில்லை - 1973
5) உண்மையே உன் விலை என்ன? - 1974
6) உறவுகள் இல்லையடி பாப்பா - 1975
7) வந்தே மாதரம் - 1975
8) ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் - 1977




1970களில் சோவின் திரைப்படங்கள் 


1) எங்க மாமா 
வெளியான தேதி - 14 ஜனவரி 1970
இயக்குனர்  - .சி.திருலோகசந்தர்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - ஞானம்
ஜோடி - கிடையாது 

2) மாட்டுக்கார வேலன் 
வெளியான தேதி - 14 ஜனவரி 1970
இயக்குனர்  - .எல்.நாராயணன்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - சுந்தரம்
ஜோடி - சச்சு 


3) தரிசனம்  
வெளியான தேதி - 1 பிப்ரவரி 1970
இயக்குனர்  - வி.டி.அரசு
நாயகன் - ஏ.வி.எம்.ராஜன்
நாயகி - புஷ்பலதா
கதாபாத்திரம் பெயர் - நல்லதம்பி
ஜோடி - மனோரமா 


4) விளையாட்டுப் பிள்ளை  
வெளியான தேதி - 20 பிப்ரவரி 1970
இயக்குனர்  - .பி.நாகராஜன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - பத்மினி
கதாபாத்திரம் பெயர் - வேலு
ஜோடி - மனோரமா 
மேல் தகவல் - சோ நகைச்சுவை வில்லன்


5) என் அண்ணன்   
வெளியான தேதி - 21 மே  1970
இயக்குனர்  - நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - பூச்சி
ஜோடி - கீதாஞ்சலி 


6) தேடி வந்த மாப்பிள்ளை    
வெளியான தேதி - 29 ஆகஸ்ட்   1970
இயக்குனர்  - பந்துலு
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - கர்ப்பதன்
ஜோடி - ஜோதி லட்சுமி 


7) சிநேகிதி    
வெளியான தேதி - 11 செப்டம்பர்   1970
இயக்குனர்  - ஜி.ராமகிருஷ்ணன்
நாயகன் - ஜெமினி கணேசன், ரவிசந்திரன்
நாயகி - பாரதி, சரோஜாதேவி
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது 
ஜோடி - மனோரமா 


8) எங்கள் தங்கம்    
வெளியான தேதி - 9 அக்டோபர்    1970
இயக்குனர்  - கிருஷ்ணன்-பஞ்சு
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் - லாறி 
ஜோடி - கிடையாது  
மேல் தகவல் - கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில்பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாசோ ஆகியோர் நடித்துள்ளனர்.


9) குமரிக் கோட்டம்
வெளியான தேதி - 26 ஜனவரி 1971
இயக்குனர்  - நீலகண்டன்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  பாலு 
ஜோடி - சச்சு

10) அருணோதயம்
வெளியான தேதி - 5 மார்ச்  1971
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - சரோஜாதேவி
கதாபாத்திரம் பெயர் -  டாக்டர் சிரஞ்சீவி 
ஜோடி - மனோரமா


11) முகமது பின் துக்ளக்
வெளியான தேதி - 5 மார்ச்  1971
இயக்குனர்  - சோ
நாயகன் - சோ
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் -  முகமது பின் துக்ளக், மஹாதேவன் 
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - இப்படம் சோ இயக்கிய முதல் படம்; இரு வேடங்கள் சோவுக்கு; சோ நாயகனாக நடித்த முதல் படம்


12) ரிக்ஷாக்காரன் 
வெளியான தேதி - 29 மே 1971
இயக்குனர்  - எம்.கிருஷ்ணன் நாயர்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - மஞ்சுளா
கதாபாத்திரம் பெயர் -  பிச்சுமணி 
ஜோடி - கிடையாது


13) சூதாட்டம்
வெளியான தேதி - 12 ஜூன் 1971
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - மனோரமா


14) தேரோட்டம்
வெளியான தேதி - 16 ஜூலை 1971
இயக்குனர்  - வி.டி.அரசு
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - பத்மினி
கதாபாத்திரம் பெயர் - சீனா தானா
ஜோடி - மனோரமா  

15) யானை வளர்த்த வானம்பாடி மகன் 
வெளியான தேதி - 22 ஜூலை 1971
இயக்குனர்  - பி.சுப்ரமணியம்
நாயகன் - ஜெமினி கணேசன், ஆனந்தன்
நாயகி - ராஜஸ்ரீ, விஜயநிர்மலா
கதாபாத்திரம் பெயர் -  பாலு 
ஜோடி - மனோரமா

16) நீரும் நெருப்பும்  
வெளியான தேதி - 18 அக்டோபர் 1971
இயக்குனர்  - நீலகண்டனின்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - கிடையாது

17) ஒரு தாய் மக்கள்   
வெளியான தேதி - 9 டிசம்பர் 1971
இயக்குனர்  - நீலகண்டனின்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  சிகாமணி
ஜோடி - கிடையாது

18) சங்கே முழங்கு   
வெளியான தேதி - 4 பிப்ரவரி 1972
இயக்குனர்  - நீலகண்டனின்
நாயகன் - எம்.ஜி.ஆர்.
நாயகி - லட்சுமி
கதாபாத்திரம் பெயர் -  சிந்தாமணி
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - சோ எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த கடைசிப்  படம்


19) மிஸ்டர் சம்பத் 
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1972
இயக்குனர்  - சோ
நாயகன் - சோ
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் -  சம்பத் 
ஜோடி - மனோரமா
மேல் தகவல் - சோ இயக்கிய படம்

20) புகுந்த வீடு  
வெளியான தேதி - 13 ஏப்ரல் 1972
இயக்குனர்  - பட்டு
நாயகன் - .வி.எம்.ராஜன், ரவிசந்திரன்
நாயகி - லட்சுமி, சந்திரகலா
கதாபாத்திரம் பெயர் -  அம்பலம்
ஜோடி - மனோரமா
மேல் தகவல் - சோவுக்கு இரட்டை வேடம்

21) தெய்வ சங்கல்பம்  
வெளியான தேதி - 21 ஜூலை 1972
இயக்குனர்  - பி.ஆர்.சோமு
நாயகன் - .வி.எம்.ராஜன்
நாயகி - விஜயகுமாரி
கதாபாத்திரம் பெயர் -  மணி
ஜோடி - சச்சு


22) தவப் புதல்வன்    
வெளியான தேதி - 26 ஆகஸ்ட் 1972
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  ஜேம்ஸ்
ஜோடி - மனோரமா

23) உனக்கும் எனக்கும்    
வெளியான தேதி - 1 அக்டோபர்  1972
இயக்குனர்  - என்.எஸ்.மணியம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - பாரதி
கதாபாத்திரம் பெயர் -  நல்ல தம்பி
ஜோடி - தெரியவில்லை

24) தாய்க்கு ஒரு பிள்ளை     
வெளியான தேதி - 5 டிசம்பர்   1972
இயக்குனர்  - பட்டு
நாயகன் - ஜெய்சங்கர், .வி.எம்.ராஜன்
நாயகி - சாவித்திரி, வெண்ணிறாடை நிர்மலா 
கதாபாத்திரம் பெயர் -  முனியப்பா
ஜோடி - மனோரமா


25) ஆசீர்வாதம்     
வெளியான தேதி - 22 டிசம்பர்   1972
இயக்குனர்  - ஆர். தேவராஜன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - லட்சுமி
கதாபாத்திரம் பெயர் -  வேணு
ஜோடி - கிடையாது

26) அலைகள்       
வெளியான தேதி - 1 ஜனவரி 1973
இயக்குனர்  - ஸ்ரீதர்
நாயகன் - விஷ்ணுவர்தன் 
நாயகி - சந்திரகலா
கதாபாத்திரம் பெயர் -  நாராயணன்
ஜோடி - மனோரமா

27) வாயாடி   
வெளியான தேதி - 13 ஜனவரி 1973
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  ராஜா
ஜோடி - கிடையாது

28) பெத்த மனம் பித்து  
வெளியான தேதி - 14 ஜனவரி 1973
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - முத்துராமன்
நாயகி - ஜெயா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - மனோரமா

29) நல்ல முடிவு 
வெளியான தேதி - 23 ஜனவரி 1973
இயக்குனர்  - சி.என்.ஷண்முகம்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - ஜெயந்தி 
கதாபாத்திரம் பெயர் -  பாலு
ஜோடி - மனோரமா

30) பிரார்த்தனை
வெளியான தேதி - 2 பிப்ரவரி 1973
இயக்குனர்  - கௌசிகன்
நாயகன் - ஏ.வி.எம்.ராஜன் 
நாயகி - சௌகார் ஜானகி
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

31) கங்கா கௌரி       
வெளியான தேதி -  14 ஏப்ரல் 1973
இயக்குனர்  - பி.ஆர். பந்துலு 
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - ஜெயலலிதா, ஜெயந்தி
கதாபாத்திரம் பெயர் -  நாரதர்
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - சோ நடித்த முதல் புராணப் பாத்திரம்


32) வந்தாளே மகராசி        
வெளியான தேதி -  14 ஏப்ரல் 1973
இயக்குனர்  - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  ஜம்பு
ஜோடி - ஜெயலலிதா
மேல் தகவல் - மனோரமாவுக்கும் சச்சுவுக்கும் இதுவரை ஜோடியாக நடித்து வந்த சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம்

33) அன்புச் சகோதரர்கள் 
வெளியான தேதி - 4 மே 1973
இயக்குனர்  - லட்சுமி தீபக்
நாயகன் - ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன் 
நாயகி - வெண்ணிறாடை நிர்மலா, ஜமுனா
கதாபாத்திரம் பெயர் -  கோபி
ஜோடி - தெரியவில்லை
மேல் தகவல் - பல படங்களில் சோவுக்கு ஜோடியாக நடித்த மனோரமா இப்படத்தில் அவருக்குத் தாயாராக வருகிறார்.

34) காசி யாத்திரை
வெளியான தேதி - 25 மே 1973
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், ஸ்ரீகாந்த் 
நாயகி - குமாரி பத்மினி
கதாபாத்திரம் பெயர் -  சொக்கலிங்கம்
ஜோடி - மனோரமா


35) பொன்னூஞ்சல்
வெளியான தேதி - 15 ஜூன் 1973
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - உஷா நந்தினி
கதாபாத்திரம் பெயர் -  சிங்காரம்
ஜோடி - கிடையாது

36) சூரியகாந்தி     
வெளியான தேதி - 27 ஜூலை 1973
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - முத்துராமன் 
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் -  மஹாபலி
ஜோடி - சி.ஐ.டி. சகுந்தலா

37) மலை நாட்டு மங்கை    
வெளியான தேதி - 3 செப்டம்பர்    1973
இயக்குனர்  - பி.சுப்ரமணியம்
நாயகன் - ஜெமினி கணேசன், சசிகுமார்
நாயகி - விஜஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் -  ராமு
ஜோடி - கிடையாது


38) வீட்டுக்கு வந்த மருமகள்    
வெளியான தேதி - 3 செப்டம்பர்    1973
இயக்குனர்  - ஆர்.விட்டல்
நாயகன் - ஏ.வி.எம். ராஜன், ரவிசந்திரன்
நாயகி - லதா, வெண்ணிறாடை நிர்மலா 
கதாபாத்திரம் பெயர் -  சாம்பு
ஜோடி - மனோரமா

39) வாக்குறுதி      
வெளியான தேதி - 8 செப்டம்பர்    1973
இயக்குனர்  - மோகன் காந்திராமன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - வெண்ணிறாடை நிர்மலா
கதாபாத்திரம் பெயர் -  மணிவண்ணன்
ஜோடி - மனோரமா

40) பொன்வண்டு      
வெளியான தேதி - 28 செப்டம்பர்    1973
இயக்குனர்  - என்.எஸ்.மணியம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - பாரதி, உஷா நந்தினி, சுபா, ஜெயசித்ரா 
கதாபாத்திரம் பெயர் -  சிக்கல் சிங்காரபாலன்
ஜோடி - சச்சு

41) ஸ்கூல் மாஸ்டர்      
வெளியான தேதி - 25 அக்டோபர் 1973
இயக்குனர்  - பி.ஆர்.பந்துலு
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - சௌகார் ஜானகி
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

42) பிள்ளை செல்வம்      
வெளியான தேதி - நவம்பர்   1973
இயக்குனர்  - வி. ராமசந்திர ராவ்
நாயகன் - மாஸ்டர் ராமு, ஜெய்சங்கர்
நாயகி - குமாரி பத்மினி
கதாபாத்திரம் பெயர் -  சோமு
ஜோடி - மனோரமா

43) மல்லிகைப் பூ      
வெளியான தேதி - 4 டிசம்பர்  1973
இயக்குனர்  - என்.எஸ்.மணியம்
நாயகன் - முத்துராமன்
நாயகி - பிரமீளா
கதாபாத்திரம் பெயர் -  முனியாண்டி
ஜோடி - மனோரமா
மேல் தகவல் - சோவுக்குக் கௌரவ வேடம்

44) மனிதரில் மாணிக்கம்       
வெளியான தேதி - 7 டிசம்பர் 1973
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - ஏ.வி.எம்.ராஜன், சிவாஜி கணேசன்
நாயகி - பிரமீளா
கதாபாத்திரம் பெயர் -  வேலு
ஜோடி - கிடையாது

45) ஷண்முகப்  ப்ரியா      
வெளியான தேதி -  1973
இயக்குனர்  - கே.கிருஷ்ணமூர்த்தி
நாயகன் - முத்துராமன்
நாயகி - ஜெயந்தி
கதாபாத்திரம் பெயர் -  நாரதர்
ஜோடி - கிடையாது


46) கல்யாணமாம் கல்யாணம்  
வெளியான தேதி - 12 ஜனவரி 1974
இயக்குனர்  - கே.கிருஷ்ணமூர்த்தி
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  டாக்டர்
ஜோடி - கிடையாது


47) சிவகாமியின் செல்வன்   
வெளியான தேதி - 26 ஜனவரி 1974
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் -  சிகாமணி
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம்.

48) தங்கப் பதக்கம்   
வெளியான தேதி - 1 மார்ச் 1974
இயக்குனர்  - பி. மாதவன்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  சுந்தரம், வையாபுரி
ஜோடி - மனோரமா, புஷ்பமாலா
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்கு இரண்டு வேடங்கள்


49) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 
வெளியான தேதி - 24 மே 1974
இயக்குனர்  - ரா. சங்கரன்
நாயகன் - சிவகுமார்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  பரந்தாமன்
ஜோடி - மனோரமா

50) ஒரே சாட்சி  
வெளியான தேதி - 30 மே 1974
இயக்குனர்  - கே.விஜயன் 
நாயகன் - ஏ.வி.எம்.ராஜன்
நாயகி - பி.ஆர்.வரலட்சுமி
கதாபாத்திரம் பெயர் -  ரங்கன்
ஜோடி - மனோரமா

51) ரோஷக்காரி  
வெளியான தேதி - 21 ஜூன் 1974
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - முத்துராமன், ரவிசந்திரன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  ஏகாம்பரம்
ஜோடி - கிடையாது

52) மகளுக்காக 
வெளியான தேதி - 26 ஜூலை 1974
இயக்குனர்  - எம்.கிருஷ்ணன்
நாயகன் - ஏ.வி.எம்.ராஜன், ரவிசந்திரன்
நாயகி - ஜெயா
கதாபாத்திரம் பெயர் -  ஹுசைனி
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம்.

53) இதயம் பார்க்கிறது 
வெளியான தேதி - 9 ஆகஸ்ட் 1974
இயக்குனர்  - ஜகந்நாதன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  புரோக்கர் பரமசிவம்
ஜோடி - மனோரமா
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம்.

54) ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்  
வெளியான தேதி - 13 நவம்பர் 1974
இயக்குனர்  - வியட்நாம் வீடு சுந்தரம்
நாயகன் - ஜெமினி கணேசன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - கிடையாது

55) தாய்ப் பாசம்   
வெளியான தேதி - நவம்பர் 1974
இயக்குனர்  - பி.வி.ஸ்ரீனிவாசன்
நாயகன் - சிவகுமார் 
நாயகி - பிரமிளா
கதாபாத்திரம் பெயர் -  சோமு 
ஜோடி - கிடையாது


56) சினிமாப் பைத்தியம்    
வெளியான தேதி - 31 ஜனவரி 1975 
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  ரமணி 
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - கமலுடன் சோ நடித்த முதல் படமிது.


57) உங்க வீட்டுக் கல்யாணம்      
வெளியான தேதி - 21 பிப்ரவரி 1975 
இயக்குனர்  - சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி
நாயகன் - தேங்காய் சீனிவாசன்
நாயகி - சுபா 
கதாபாத்திரம் பெயர் -  மணி 
ஜோடி - மனோரமா


58) சொந்தங்கள் வாழ்க     
வெளியான தேதி - 21 மார்ச் 1975 
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  செட்டியார்
ஜோடி - மனோரமா

59)  பிஞ்சு மனம்      
வெளியான தேதி - 21 மார்ச் 1975 
இயக்குனர்  - ஏ.கே.சுப்ரமணியம்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - லட்சுமி, ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம்


60) அவன்தான் மனிதன்    
வெளியான தேதி - 11 ஏப்ரல் 1975 
இயக்குனர்  - ஏ.சி.திருலோகசந்தர்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  அப்பாவு
ஜோடி - சச்சு

61) மேல் நாட்டு மருமகள்      
வெளியான தேதி - 10 மே 1975 
இயக்குனர்  - ஏ.பி.நாகராஜன்
நாயகன் - சிவகுமார்
நாயகி - லாரன்ஸ் 
கதாபாத்திரம் பெயர் -  சேட்
ஜோடி - மனோரமா
மேல் தகவல் - இப்படத்தில் சோவுக்குக் கௌரவ வேடம்

62) தேன் சிந்துதே வானம்      
வெளியான தேதி - 14 மே 1975 
இயக்குனர்  - ரா சங்கரன்
நாயகன் - சிவகுமார்
நாயகி - ஜெயசித்ரா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை


63) யாருக்கும் வெட்கமில்லை     
வெளியான தேதி - 13 ஜூன் 1975 
இயக்குனர்  - சோ
நாயகன் - சிவகுமார்
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  ராவுத்தர் 
ஜோடி - கிடையாது


64) உறவு சொல்ல ஒருவன்      
வெளியான தேதி - 18 ஜூலை 1975 
இயக்குனர்  - தேவ்ராஜ் - மோகன்
நாயகன் - முத்துராமன்
நாயகி - பத்மப்ரியா, சுஜாதா
கதாபாத்திரம் பெயர் -  முருகேசன் 
ஜோடி - கிடையாது


65) பணம் பத்தும் செய்யும்      
வெளியான தேதி - 1 ஆகஸ்ட் 1975 
இயக்குனர்  - ஜி.சுப்ரமணிய ரெட்டியார்
நாயகன் - சோ 
நாயகி - ரத்னா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை
மேல் தகவல் - திரைக்கதை-வசனம் சோ

66) ஆண் பிள்ளை சிங்கம்      
வெளியான தேதி - 19 செப்டம்பர் 1975 
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - சிவகுமார்
நாயகி - ஸ்ரீப்ரியா, சுஜாதா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - படாபட் ஜெயலட்சுமி
மேல் தகவல் - இதில் சோவுக்கு வில்லன் வேடம். நகைச்சுவை வில்லன் இல்லை. பக்கா வில்லன்.

67) அந்தரங்கம்       
வெளியான தேதி - 27 நவம்பர் 1975 
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - கமல்ஹாசன் 
நாயகி - தீபா 
கதாபாத்திரம் பெயர் -  தஞ்சாவூர் தங்கமணி
ஜோடி - கிடையாது

68) அவளுக்கு ஆயிரம் கண்கள்       
வெளியான தேதி - 28 நவம்பர் 1975 
இயக்குனர்  - டி.ஆர்.ராமண்ணா
நாயகன் - ஜெய்சங்கர், ரவிசந்திரன்
நாயகி - ஜெயலலிதா 
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

69) உண்மையே உன் விலை என்ன?         
வெளியான தேதி - 30 ஏப்ரல் 1976 
இயக்குனர்  - சோ 
நாயகன் - முத்துராமன்
நாயகி - கிடையாது
கதாபாத்திரம் பெயர் -  சத்தியநாராயணா
ஜோடி - சுகுமாரி
மேல் தகவல் - 1974யில் மேடையேற்றப்பட்ட "உண்மையே உன் விலை என்ன" என்ற நாடகத்தின் படமாக்கம். கதை-வசனம்-இயக்கம் சோ.

70) மேயர் மீனாட்சி          
வெளியான தேதி - 28 மே 1976 
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  அப்புசாமி 
ஜோடி - மனோரமா

71) பேரும் புகழும்           
வெளியான தேதி - 22 அக்டோபர் 1976 
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - முத்துராமன்
நாயகி - சுஜாதா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

72) தாய் வீட்டு சீதனம்           
வெளியான தேதி - 3 நவம்பர் 1976 
இயக்குனர்  - மதுரை திருமாறன்
நாயகன் - ஜெய்சங்கர், ரவிசந்திரன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் -  கண்ணன்
ஜோடி - கிடையாது


73) ரோஜாவின் ராஜா            
வெளியான தேதி - 15 டிசம்பர் 1976 
இயக்குனர்  - கே.விஜயன்
நாயகன் - சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன்
நாயகி - வாணிஸ்ரீ
கதாபாத்திரம் பெயர் -  ஜம்பு
ஜோடி - மனோரமா 
மேல் தகவல் - சோவுக்கு இரட்டை வேடம். அப்பா-மகன்.

74) அவன் ஒரு சரித்திரம்             
வெளியான தேதி - 14 ஜனவரி 1977 
இயக்குனர்  - கே.எஸ்.பிரகாஷ் ராவ்
நாயகன் - சிவாஜி கணேசன்
நாயகி - காஞ்சனா, மஞ்சுளா
கதாபாத்திரம் பெயர் -  ராமு 
ஜோடி - எம்.பானுமதி
மேல் தகவல் - சோவுடைய சிற்றன்னையாக மனோரமாவும், மனோரமாவுடைய தந்தையாக தங்கவேலுவும் நடித்துள்ளனர்.

75) தனிக் குடித்தனம்             
வெளியான தேதி - 4 மார்ச் 1977 
இயக்குனர்  - எஸ்.ஏ. கண்ணன்
நாயகன் - ஒய்.ஜி.மகேந்திரன்
நாயகி - சங்கீதா
கதாபாத்திரம் பெயர் -  பாலு 
ஜோடி - கே.ஆர்.விஜயா

76) உன்னை சுற்றும் உலகம்             
வெளியான தேதி - 29 ஏப்ரல் 1977 
இயக்குனர்  - ஜி.சுப்பிரமணிய ரெட்டி
நாயகன் - கிடையாது
நாயகி - ஜெயலலிதா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - சச்சு 
மேல் தகவல் - சோவுக்குக் கௌரவ வேடம்

77) பலப் பரீட்சை              
வெளியான தேதி -  1977 
இயக்குனர்  - முக்தா சீனிவாசன்
நாயகன் - முத்துராமன்
நாயகி - சுஜாதா
கதாபாத்திரம் பெயர் -  கிடையாது
ஜோடி - மனோரமா 

78) ராசி நல்ல ராசி               
வெளியான தேதி -  23 டிசம்பர் 1977 
இயக்குனர்  - கோபு
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - விதுபாலா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

79) வாழ்த்துங்கள்                
வெளியான தேதி -  14 ஜனவரி 1978 
இயக்குனர்  - சி.வி.ராஜேந்திரன்
நாயகன் - முத்துராமன் 
நாயகி - சந்திரகலா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

80) அவள் ஒரு அதிசயம் 
வெளியான தேதி -  24 மார்ச் 1978 
இயக்குனர்  - பி.வி.ஸ்ரீனிவாஸ்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஸ்ரீப்ரியா
கதாபாத்திரம் பெயர் -  தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை

81) அன்னப்பூரணி   
வெளியான தேதி -  ஆகஸ்ட் 1978 
இயக்குனர்  - பஞ்சு-கிருஷ்ணன
நாயகன் - முத்துராமன்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - கிடையாது
ஜோடி - மனோரமா 

82) சக்கப்  போடு போடு ராசா  
வெளியான தேதி -  15 செப்டம்பர் 1978 
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ஜெய்சங்கர்
நாயகி - ஜெயசித்ரா  
கதாபாத்திரம் பெயர் - ஐயாசாமி 
ஜோடி - மனோரமா

83) இறைவன் கொடுத்த வரம்   
வெளியான தேதி -  22 செப்டம்பர் 1978 
இயக்குனர்  - ஏ பீம்சிங்
நாயகன் - விஜயகுமார், ரஜினிகாந்த்
நாயகி - சுமித்ரா  
கதாபாத்திரம் பெயர் - ராஜா
ஜோடி - படாபட் ஜெயலட்சுமி
மேல் தகவல் - குணச்சித்திர வேடம்; ரஜினிகாந்துடன் சோ நடித்த முதல் படமிது. 

84) கருணை உள்ளம்  
வெளியான தேதி -  29 செப்டம்பர் 1978 
இயக்குனர்  - பீம்சிங் 
நாயகன் - விஜயகுமார்
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - தெரியவில்லை



85) வேலும் மயிலும் துணை 
வெளியான தேதி -  17 மார்ச் 1979 
இயக்குனர்  - ரா சங்கரன்
நாயகன் - தெரியவில்லை
நாயகி - தெரியவில்லை
கதாபாத்திரம் பெயர் - தெரியவில்லை
ஜோடி - மனோரமா

86) நாடகமே உலகம்  
வெளியான தேதி -  18 மே 1979 
இயக்குனர்  - கிருஷ்ணன் பஞ்சு
நாயகன் - மோகன்பாபு
நாயகி - கே.ஆர்.விஜயா
கதாபாத்திரம் பெயர் - ரத்தன் 
ஜோடி - கிடையாது


87) ஆறிலிருந்து அறுபது வரை            
வெளியான தேதி - 9 செப்டம்பர் 1979
இயக்குனர்  - எஸ்.பி.முத்துராமன்
நாயகன் - ரஜினிகாந்த்
நாயகி - படாபட் ஜெயலட்சுமி
கதாபாத்திரம் பெயர் -  அழகேசன் 
ஜோடி - கிடையாது
மேல் தகவல் - குணச்சித்திர வேடம்



1970களின் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கை

எழுதிய நாடகங்கள் - 8
நடித்த நாடகங்கள் - 8
இயக்கிய நாடகங்கள் - 8
நடித்த திரைப்படங்கள் - 87
சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 1
சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 0
நாயகனாக நடித்த படங்கள் - 3
வில்லனாக நடித்த படங்கள் - 2
கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 7
எழுதிய படங்கள் - 5
இயக்கிய படங்கள் - 4
சோ நாடகம் படமாக்கப்பட்டது - 3
இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் - 3
புராணப் பாத்திரத்தில் நடித்த படங்கள் - 2

சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ஜெய்சங்கர் - 21 படங்கள்
சிவாஜி கணேசன்- 11 படங்கள்
முத்துராமன் 11 படங்கள்
ஏ.வி.எம்.ராஜன் - 10 படங்கள்
எம்.ஜி.ஆர் - 9 படங்கள்
ஜெமினி கணேசன்8 படங்கள் 
ரவிசந்திரன் 7 படங்கள்
சிவகுமார் 6 படங்கள்
சோ - 3 படங்கள்
மேஜர் சுந்தர்ராஜன் - 1 படம்
ஆனந்தன் 1 படம்
ரஜினிகாந்த்2 படங்கள்
கமல்ஹாசன் 1 படம்
விஷ்ணுவர்தன்1 படம்
விஜயகுமார் 2 படங்கள்
 வி.கே.ராமசாமி - 1 படம்
தேங்காய் சீனிவாசன் 1 படம்
சுருளி ராஜன் - 1 படம்
ஒய்.ஜி.மகேந்திரன் 1 படம்
சசிகுமார் - 1 படம்
மோகன்பாபு 1 படம்
 ஸ்ரீகாந்த் - 1 படம்
மாஸ்டர் ராமு 1 படம்



சோ நடித்த படங்களின் நாயகியர் 

ஜெயலலிதா - 16 படங்கள்
கே.ஆர். விஜயா - 11 படங்கள்
ஜெயசித்ரா 8 படங்கள்
லட்சுமி - 4 படங்கள்
சுஜாதா- 4 படங்கள்
வெண்ணிறாடை நிர்மலா 4 படங்கள்
சந்திரகலா 3 படங்கள்
பிரமீளா 3 படங்கள்
ஜெயந்தி - 3 படங்கள்
சரோஜா தேவி 2 படங்கள்
வாணிஸ்ரீ - 2 படங்கள்
பத்மினி - 2 படங்கள்
பாரதி 2 படங்கள்
மஞ்சுளா 2 படங்கள்
சௌகார் ஜானகி - 2 படங்கள்
குமாரி பத்மினி 2 படங்கள்
 உஷா நந்தினி2 படங்கள்
 சுபா2 படங்கள்
ஜெயா- 2 படங்கள்
ஸ்ரீப்ரியா- 2 படங்கள்
புஷ்பலதா - 1 படம்
ராஜஸ்ரீ - 1 படம்
படாபட் ஜெயலட்சுமி - 1 படம்
சுமித்ரா - 1 படம்
விஜயநிர்மலா - 1 படம்
சாவித்திரி - 1 படம்
விஜயகுமாரி - 1 படம்
விஜஸ்ரீ 1 படம்
பாரதி1 படம்
லதா 1 படம்
ஜமுனா - 1 படம்
பி.ஆர்.வரலட்சுமி - 1 படம்
ரத்னா- 1 படம்
தீபா- 1 படம்
லாரன்ஸ் - 1 படம்
பத்மப்ரியா - 1 படம்
காஞ்சனா- 1 படம்
சங்கீதா- 1 படம்
விதுபாலா- 1 படம்


சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

முக்தா சீனிவாசன் -  7 படங்கள்
நீலகண்டன் - 5 படங்கள்
மதுரை திருமாறன் - 6 படங்கள்
எஸ்.பி.முத்துராமன்4 படங்கள்
சி.வி.ராஜேந்திரன் 4 படங்கள்
சோ - 4 படங்கள்
பந்துலு - 3 படங்கள்
கிருஷ்ணன்-பஞ்சு - 3 படங்கள்
என்.எஸ்.மணியம் 3 படங்கள்
ரா. சங்கரன் 3 படங்கள்
.சி.திருலோகசந்தர் - 2 படங்கள்
கே.கிருஷ்ணமூர்த்தி2 படங்கள்
எம்.கிருஷ்ணன் நாயர் 2 படங்கள்
பி.சுப்ரமணியம் 2 படங்கள்
வி.டி.அரசு - 2 படங்கள்
.பி.நாகராஜன் - 2 படங்கள்
பி.வி.ஸ்ரீனிவாசன்2 படங்கள்
பட்டு 2 படங்கள்
.எல்.நாராயணன் - 1 படம்
ஜி.ராமகிருஷ்ணன் - 1 படம்
ஆர். தேவராஜன்  1 படம்
பி.ஆர்.சோமு 1 படம்
வி. ராமசந்திர ராவ் 1 படம்
ஸ்ரீதர்  1 படம்
மோகன் காந்திராமன் 1 படம்
ஆர்.விட்டல்1 படம்
லட்சுமி தீபக்1 படம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்1 படம்
கௌசிகன்1 படம்
சி.என்.ஷண்முகம்1 படம்
ஜகந்நாதன் 1 படம்
பி. மாதவன் 1 படம்
கே.விஜயன் 2 படங்கள்
ஜி.சுப்ரமணிய ரெட்டியார்2 படங்கள்
வியட்நாம் வீடு சுந்தரம் 1 படம்
டி.ஆர்.ராமண்ணா1 படம்
தேவ்ராஜ் - மோகன் 1 படம்
ஏ.கே.சுப்ரமணியம் 1 படம்
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி 1 படம்
கே.எஸ்.பிரகாஷ் ராவ்1 படம்
எஸ்.ஏ. கண்ணன் 1 படம்
கோபு1 படம்
பீம்சிங் 2 படங்கள்


சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா - 32 படங்கள்
சச்சு - 6 படங்கள்
கீதாஞ்சலி  - 1 படம்
ஜோதி லட்சுமி  - 1 படம்
சி.ஐ.டி. சகுந்தலா - 1 படம்
ஜெயலலிதா- 1 படம்
புஷ்பமாலா- 1 படம்
படாபட் ஜெயலட்சுமி- 1 படம்
சுகுமாரி- 1 படம்
எம்.பானுமதி- 1 படம்
கே.ஆர். விஜயா - 1 படம்

சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1970 - 8
1971 - 9
1972 - 8
1973 - 20
1974 - 10
1975 - 13
1976 - 5
1977 - 5
1978 - 6
1979 - 3