Thursday, April 5, 2018

யாருக்கும் வெட்கமில்லை

"A woman cannot become a prostitute, all by herself. For becoming a prostitute, a woman requires the cooperation of several men. This society creates a prostitue, and then condemns its own creation."

"Confusion can come only to persons who are capable of thinking. Persons who refuse to think, will never get confused. Our society is not confused; it is never confused; never."

மேலே நான் கொடுத்த வசனங்கள் சாம்பிளுக்கு மட்டுமே. இதைப் போல பல கூர்மையான வசனங்கள் - முக்கியமாக சமூகச் சீர்கேடுகளைப் பற்றி - அரசியலைப் பற்றியல்ல. அரசியலுக்கே சோ முக்கியத்துவம் கொடுக்கிறார் எனச் சொல்பவர்கள் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும். 1973யில் மேடையேறிய இந்நாடகம் சோ எழுதி இயக்கிய சிறந்த நாடகங்களில் ஒன்று.

ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரியாகும் ஒரு பெண்ணை முதல் கேசுக்காக அலையும் வக்கீல் ஒருவன் பெயிலில் எடுத்து, தன்னுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்க வைக்கிறான். அவளை ஏமாற்றிய கயவன் அந்த வக்கீலுடைய அண்ணன்தான் என்ற உண்மை பிறகே தெரிகிறது. இந்தப் பெண் யார் என்பதை அறிந்தவுடன், அந்த வீட்டார் அவளிடம் நடந்து கொள்ளும் முறை, அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆண்கள் என கதை போகிறது. ஒரு விபச்சாரியை உருவாக்கும் ஆண்கள், மனத்தால் தூய்மையில்லாத ஆண்கள் எப்படி அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியும், ஏன் ஆண்கள் தவறுக்குத் தண்டிக்கப் படவில்லை என நாடகம் அலசுகிறது. குற்றம் செய்யாதவர் யாராவது இருந்தால் விபச்சாரி மீது கல்லெறியவும் எனச் சொன்ன ஏசு நாதரின் கூற்றைப் பிரதிபலிக்கும் நாடகம்.

இந்நாடகத்தில் ராவுத்தர் என்ற வேடத்தில் சோ வருகிறார். நாயகிக்கு வக்காலத்து வாங்கி அவள் சார்பாக பேசி, நியாயத்தை நிலைநாட்ட முயலும் கதாபாத்திரம். ஆனை மணாளன் என்ற அரசியல்வாதியாக நீலு; அவர் தோன்றும் காட்சிகளில் மட்டும் சில அரசியல் வசனங்கள் வருகின்றன. 

No comments:

Post a Comment