Monday, December 9, 2019

சர்க்கார் புகுந்த வீடு

சோவுடைய அரசியல் நகைச்சுவை நாவலிது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருக்கும் ஐந்து குடும்பங்களின் பொறுப்புகளை அரசு ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குளறுபடிகளைப் பற்றிய கதை. சோவுடைய "சட்டையர்" அபாரம். அனைத்து அரசியல்வாதிகளையும் ரசிக்கும்படி கிண்டலடிக்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் நமக்கு இது சோவுடைய கற்பனையா அல்லது உண்மையில் நடந்ததா எனச் சந்தேகம் வருமளவுக்கு அரசியல்வாதிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் சோ இதை எழுதியுள்ளார்.

அக்கால அரசியல் புரிந்தவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டிய அளவு சரக்குள்ள புத்தகம். ஆனால் சற்றே நீண்ட நாவல்.  

Wednesday, October 16, 2019

அடுத்த ஆட்சி நமதே

தமிழக முதல்வராக விரும்பும் ஒன்பது அரசியல்வாதிகளுக்கும் வாயுதாசன் என்ற பெயரில் தாயத்து அனுப்பி சில வழிமுறைகளைப் பின்பற்றும்படி எழுதுகிறார்கள் ஜக்கு, கந்தசாமி, மற்றும் ஆர்.என்.ஆர். அரசியல்வாதிகள் அதை உண்மை என நம்பி அடிக்கும் கூத்தே முழுக்கதை.

ஜக்கு மூலம் மெட்ராஸ் பாஷையில் புகுந்து விளையாடுகிறார் சோ. தைரியமாக எல்லா அரசியல்வாதிகளையும் அவர்களுடைய உண்மையான குணாதிசயங்களையும் விமர்சிக்கிறார். இக்கதையைப் படிக்கும் நாம் அந்த அரசியல்வாதிகள் அனைவரும் சோ சொல்லியபடியே உண்மையில் நடக்கக் கூடியவர்கள் என்பதை மிகவும் சுலபமாக உணர முடிகிறது.

சோவைத் தவிர யாருக்கும் இந்த அளவு அரசியல்வாதிகளை நேரிடையாக நையாண்டி செய்யும் தைரியம் கிடையாது. வயிறு குலுங்கச் சிரிக்கும் நாம் நம்முடைய மற்ற வேலைகளை மறந்து இக்கதையை முழுவதுமாகப் படித்து முடிப்பதிலேயே ஈடுபடுவோம்.  

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

ஜானகி முதல்வராக சில காலம் இருந்ததற்குப் பிறகு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தேர்தலில் வென்று அடுத்து யார் முதல்வர் ஆவார்கள் எனக் குழப்பம் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் நடப்பதாகக் கற்பனைக்கதை இது. வயிறு வலிக்க நகைச்சுவையும்  அரசியல்வாதிகளை நேரிடையாகவே கேலி செய்யும் சோவின் தைரியமும் இந்தப் புத்தகத்தை சோவின் சிறந்த படைப்பாக்குகின்றன.

இறந்த காலத்தில் நடந்த அரசியல் செய்திகளைப் புட்டு புட்டு வைக்கும் பழைய ஓலைச் சுவடி கிடைக்கிறது. அதில் அடுத்த முதல்வர் யார் என்பதைக் கூறும் ஓலைச் சுவடி ஓரிடத்தில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக எழுதி உள்ளது. அதைக் கண்டுபிடிக்க முதல்வராக விரும்பும் அரசியல்வாதிகளின் ரகசிய செயல்களும் கோமாளித்தனங்களுமே முழுக்கதை. 

Sunday, September 22, 2019

இறைவன் கொடுத்த வரம்

ரஜினிகாந்துடன் சோ சேர்ந்து நடித்த முதல் படமிது. 1978, 22 செப்டம்பரில் வெளியான இப்படத்தை ஏ பீம்சிங் இயக்கியிருந்தார்.

விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்கள். படாபட் ஜெயலட்சுமியும் சுமித்ராவும் நாயகிகள். ஸ்ரீகாந்த், எம்.பானுமதி போன்றோரும் நடித்திருந்தனர்.

சோவின் கேரக்டர் பெயர் ராஜா.

ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் கேரக்டர். விஜயகுமாருடைய தங்கையான சுமித்ராவைத் திருமணம் செய்தவுடன் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சுமித்ராவுடைய தோழி ஜெயலட்சுமி இச்சம்பவத்துக்குப் பிறகு கணவனுடன் ஒட்டுதலாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் சுமித்ராவை மறுமணம் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதற்கிடையே விஜயகுமாருக்குத் திருமணம் நடக்க, கணவன் இழந்த செய்தியை மறைக்கும் சுமித்ரா ஒரு கட்டத்துக்குப் பிறகு உண்மையை வெளிப்படுத்துகிறார். சோவின் உதவியால் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்குப் போகிறார் சுமித்ரா. அங்கே மாணவராக ரஜினி சேர்கிறார். கடைசியில் உடல் நலமின்றி சுமித்ரா இறக்க, ரஜினி அவருக்குக் குங்குமமிட்டுச் சுமங்கலியாக அனுப்பி வைக்கிறார்.

பீம்சிங் இறந்த பிறகு வெளியான இப்படம், அவருடைய மோசமான படங்களில் ஒன்று. 

Sunday, March 10, 2019

யாரோ இவர் யாரோ?

1967யில் கல்கி இதழில் சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது.

ரவி கதாநாயகன். தன் முடைய முறைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதின் மூலம் தன் முடைய குடும்பத்துக்கும் தன்னுடைய மாமாவின் குடும்பத்துக்கும் உள்ள பகை மறையும் என நம்பி சென்னை வருகிறான். அவனுடன் முத்து என்ற அசட்டுக் கிராமத்தானும் வருகிறான். ரேஸ் பைத்தியமான மாமன் மனத்தை கபடம் செய்து மயக்கி, அவர் மகளைக் காதலிக்க வைக்கிறான் ரவி. முத்து தான் காதலிக்கும் பெண்ணுக்காக மிருக வைத்தியனாக வேஷம் போடுகிறான். அந்தப் பெண் வீட்டிலுள்ள நகையைத் திருட ஒரு கும்பல் முயன்று வருகிறது. அவர்கள் முத்துவைப் பயமுறுத்தி தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆள் மாறாட்டங்களுக்குப் பிறகு, எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து சுபமாகக் கதை முடிகிறது.


வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். தம்முடைய உடல் மொழியால் சிரிக்க வைப்பது என்பது வேறு. ஆனால் எழுத்தின் மூலமே மற்றவர்களைச் சிரிக்க வைக்க மிகுந்த நகைச்சுவை உணர்வும் திறனும் தேவை. அவை சோவிடம் நிரம்பி இருந்தன.

இதே கதை 1969யில் சில மாற்றங்களுடன் "ஆயிரம் பொய் " என்ற பெயரில், சோ  திரைக்கதை வசனம் எழுத, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளி வந்தது.  

Thursday, March 7, 2019

ஜனதா நகர் காலனி

நாடகமாக எழுதாமல் டி.விக்காகவே சோ எழுதிய நகைச்சுவைத் தொடர் இது. 80களின் கடைசியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

நகைச்சுவை, நையாண்டித்தனத்துக்குக் குறைவில்லாத கலகலப்பான தொடர். ஒவ்வொரு எபிஸோடிலும் ஏதாவது ஒரு பிரச்சினையில் காலனி மக்கள் மாட்டிக் கொண்டு தவிக்க, சோ பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க செய்யும் முயற்சிகளால் பிரச்சினை மென்மேலும் வளர, கடைசியில் அதிர்ஷ்டவசமாக நன்மையில் முடியும். தம்முடைய திட்டத்தால் தான் பிரச்சினைகள் தீர்ந்தது எனக் கூறி, "சுப்புணி இருக்க பயமேன் " என்ற வசனத்தைச் சோ சொல்வதுடன் எபிஸோடு முடியும்.

ஒன்றிரண்டு எபிசோடுகளில் அரசியலையும் சோ வம்புக்கிழுக்க மறக்கவில்லை. 

Saturday, January 26, 2019

சோவின் திரைப்படங்கள் - சில சுவையான தகவல்கள்

சோ திரைக்கதை வசனம் எழுதிய முதல்  படம் - தேன் மழை
சோ இயக்கிய முதல் படம் - முகமது பின் துக்ளக்
சோ நடித்த முதல் படம் - பார் மகளே பார்
சோ சோவாகவே தோன்றிய படம் - பாலம்  

சோ  சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் - 5 (மறக்க முடியுமா?, ஆண் பிள்ளை சிங்கம், கடவுளின் தீர்ப்பு, ஆனந்த், பாலம்)

சண்டைக்காட்சிகளில் நடித்த படங்கள் - 3 (மறக்க முடியுமா?, அன்னையும் பிதாவும், நான் மகான் அல்ல)

நாயகனாக நடித்த படங்கள் - 3
(முகமது பின் துக்ளக், மிஸ்டர் சம்பத், பணம் பத்தும் செய்யும்)

சோ நடித்த புராணப் படங்கள் - 4 (கங்கா கௌரி, ஷண்முகப்  ப்ரியா, நவக்கிரக நாயகி, அதிசயப் பிறவி)


வில்லனாக நடித்த படங்கள் - 4 (அன்னையும் பிதாவும், விளையாட்டுப் பிள்ளை, ஆண் பிள்ளை சிங்கம், சாட்டை இல்லாத பம்பரம்)

கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் - 11 (ஆலயம், குழந்தைக்காக, மல்லிகைப் பூ, சிவகாமியின் செல்வன், மகளுக்காக, இதயம் பார்க்கிறது, பிஞ்சு மனம், மேல் நாட்டு மருமகள், உன்னை சுற்றும் உலகம், பாலம், காதலா காதலா)

சோ நாடகம் படமாக்கப்பட்டது - 4 (மனம் ஒரு குரங்கு, முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன?)

சோ இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் - 5 (தேன் மழை, முகமது பின் துக்ளக், புகுந்த வீடு, தங்கப் பதக்கம், ரோஜாவின் ராஜா)

சோ நடித்த முதல் வண்ணப்படம் - ஒளி விளக்கு

சோ எழுதிய சீரியஸ் கதை - நிறை குடம்

எங்கள் தங்கம் - கலைஞர் ஆட்சிக் கொள்கையை விளக்க மாறன் தயாரித்த இப்படத்தில்பிற்காலத்தில் கொள்கையில் மாறுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாசோ ஆகியோர் நடித்துள்ளனர்.

சோ ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்த படம் - வந்தாளே மகராசி
மனோரமா சோவுடைய தாயாக நடித்த படங்கள் - 2 (அன்புச் சகோதரர்கள், அவன் ஒரு சரித்திரம்)

சோ எழுதிய படங்களில் அதிகம் நடித்த நடிகர்கள் - ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
எம்.ஜி.ஆர். எழுதிய கதையில் சோ நடித்த படம் - கணவன் 

சோ எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த முதல் படம் - கண்ணன் என் காதலன்
சோ எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் - சங்கே முழங்கு

சோ சிவாஜியுடன்  சேர்ந்து நடித்த முதல் படம் - பார் மகளே பார்
சோ சிவாஜியுடன்  சேர்ந்து நடித்த கடைசிப் படம் - அவன் ஒரு சரித்திரம்

சோ ஜெயலலிதாவுடன்  சேர்ந்து நடித்த முதல் படம் - கலாட்டா கல்யாணம்
சோ ஜெயலலிதாவுடன்  சேர்ந்து நடித்த கடைசிப் படம் - உன்னை சுற்றும் உலகம்

சோ ஜெய்சங்கருடன்  சேர்ந்து நடித்த முதல் படம் - நான் யார் தெரியுமா?
சோ ஜெய்சங்கருடன்  சேர்ந்து நடித்த கடைசிப் படம் - சக்கப்  போடு போடு ராசா

சோ மனோரமாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் - பார் மகளே பார்
சோ மனோரமாவுடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் - உலகம் பிறந்தது எனக்காக

சோ கமலுடன் சேர்ந்து நடித்த முதல் படம் - சினிமாப் பைத்தியம்
சோ கமலுடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் - காதலா காதலா

 சோ ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த முதல் படம் - இறைவன் கொடுத்த வரம் 
சோ ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் - அதிசயப் பிறவி  

கலைஞர் வசனத்தில் சோ நடித்த படம் - மறக்க முடியுமா 
முரசொலி மாறன் இயக்கத்தில் சோ நடித்த படம் - மறக்க முடியுமா

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சோ நடித்த முதல் படம் - தேன் மழை


சோ நடித்த படங்களின் நாயகர்கள் 

ஜெய்சங்கர் - 26 படங்கள்
சிவாஜி கணேசன்- 15 படங்கள்
ஏ.வி.எம்.ராஜன் - 14 படங்கள்
எம்.ஜி.ஆர் - 13 படங்கள்
ஜெமினி கணேசன்- 11 படங்கள்
முத்துராமன் 11 படங்கள்
ரவிசந்திரன் - 9 படங்கள்
ரஜினிகாந்த்8 படங்கள்
சிவகுமார் 5 படங்கள்
மேஜர் சுந்தர்ராஜன் - 4 படங்கள்
சோ - 3 படங்கள்
சுரேஷ் - 3 படங்கள்
கமல்ஹாசன் 2 படங்கள்
விஜயகாந்த் - 2 படங்கள்
பிரபு - 2 படங்கள்
பாண்டியன் 2 படங்கள்
 ஸ்ரீகாந்த் - 2 படங்கள்
எஸ்.எஸ்.ஆர். - 1 படம்
சத்யராஜ் 1 படம்
பாக்யராஜ்  - 1 படம்
முரளி 1 படம்
பிரபு தேவா 1 படம்
விஷ்ணுவர்தன்1 படம்
விஜயகுமார் 2 படங்கள்
சந்திரபாபு - 1 படம்
நாகேஷ் - 1 படம்
மனோகர் - 1 படம்
வி.கே.ராமசாமி - 1 படம்
தேங்காய் சீனிவாசன் 1 படம்
சுருளி ராஜன் - 1 படம்
ஒய்.ஜி.மகேந்திரன் 1 படம்
ஆனந்தன் 1 படம்
சசிகுமார் - 1 படம்
மோகன்பாபு 1 படம்
ராமதாஸ் - 1 படம்
விஜயபாபு 1 படம்
மாஸ்டர் ராமு 1 படம்



சோ நடித்த படங்களின் நாயகியர் 

ஜெயலலிதா - 21 படங்கள்
கே.ஆர். விஜயா - 15 படங்கள்
ஜெயசித்ரா 8 படங்கள்
வாணிஸ்ரீ - 7 படங்கள்
லட்சுமி - 5 படங்கள்
சுஜாதா- 5 படங்கள்
சரோஜா தேவி - 4 படங்கள்
புஷ்பலதா - 4 படங்கள்
வெண்ணிறாடை நிர்மலா 4 படங்கள்
விஜயகுமாரி - 3 படங்கள்
சௌகார் ஜானகி - 3 படங்கள்
சந்திரகலா 3 படங்கள்
பிரமீளா 3 படங்கள்
ஜெயந்தி - 3 படங்கள்
பாரதி 3 படங்கள்
சாவித்திரி - 2 படங்கள்
பத்மினி - 2 படங்கள்
ராஜஸ்ரீ - 2 படங்கள்
மஞ்சுளா 2 படங்கள்
குமாரி பத்மினி 2 படங்கள்
 உஷா நந்தினி2 படங்கள்
 சுபா2 படங்கள்
ஜெயா- 2 படங்கள்
ஸ்ரீப்ரியா- 2 படங்கள்
சங்கீதா- 2 படங்கள்
சரிதா 2 படங்கள்
அம்பிகா- 2 படங்கள்
ராதா  2 படங்கள்
விஜி - 2 படங்கள்
கெளதமி- 2 படங்கள்
ரூபிணி - 2 படங்கள்
படாபட் ஜெயலட்சுமி- 1 படம்
தேவிகா - 1 படம்
விஜயலலிதா - 1 படம்
விஜயநிர்மலா - 1 படம்
விஜஸ்ரீ 1 படம்
பாரதி1 படம்
லதா 1 படம்
ஜமுனா - 1 படம்
பி.ஆர்.வரலட்சுமி - 1 படம்
ரத்னா- 1 படம்
தீபா- 1 படம்
லாரன்ஸ் - 1 படம்
பத்மப்ரியா - 1 படம்
காஞ்சனா- 1 படம்
விதுபாலா- 1 படம்
ரதி 1 படம்
ஸ்ரீதேவி 1 படம்
சீதா- 1 படம்
சுலக்ஷனா  - 1 படம்
நளினி- 1 படம்
ஜீவிதா- 1 படம்
நதியா  - 1 படம்
இளவரசி - 1 படம்
செளந்தர்யா 1 படம்
ரம்பா 1 படம்
கனகா 1 படம்
ஷீபா 1 படம்
சுமித்ரா  1 படம்

சோ நடித்த படங்களின் இயக்குனர்கள்

முக்தா சீனிவாசன் - 12 படங்கள்
எஸ்.பி.முத்துராமன்11 படங்கள்
ப.நீலகண்டன் - 7 படங்கள்
சி.வி.ராஜேந்திரன் - 7 படங்கள்
மதுரை திருமாறன் - 6 படங்கள்
சோ - 4 படங்கள்
கிருஷ்ணன் பஞ்சு - 4 படங்கள்
பந்துலு - 3 படங்கள்
என்.எஸ்.மணியம் 3 படங்கள்
ரா. சங்கரன் 3 படங்கள்
பி.மாதவன் - 3 படங்கள்
.சி.திருலோகசந்தர் - 2 படங்கள்
கே.கிருஷ்ணமூர்த்தி2 படங்கள்
திருமலை மகாலிங்கம் - 2 படங்கள்
பி.சுப்ரமணியம் 2 படங்கள்
ஜி. ராமகிருஷ்ணன் - 2 படங்கள்
வி.டி.அரசு - 2 படங்கள்
சி.என்.ஷண்முகம் - 2 படங்கள்
எம்.கிருஷ்ணன் நாயர் 2 படங்கள்
.பி.நாகராஜன் - 2 படங்கள்
பி.வி.ஸ்ரீனிவாசன்2 படங்கள்
பட்டு 2 படங்கள்
ஸ்ரீதர்  2 படங்கள்
கே.விஜயன் 2 படங்கள்
ஈரோடு முருகேஷ் 2 படங்கள்
பீம்சிங் - 2 படங்கள்
ஜி.சுப்ரமணிய ரெட்டியார்2 படங்கள்
வீணை எஸ். பாலசந்தர் - 1 படம்
முரசொலி மாறன் - 1 படம்
சந்திரபாபு - 1 படம்
ஏ.டி.கிருஷ்ணஸ்வாமி - 1 படம்
சாணக்யா - 1 படம்
ஜீ.ஆர். நாதன் - 1 படம்
வேதாந்தம் ராகவையா - 1 படம்
கே. சங்கர் - 1 படம்
ஏ. காசிலிங்கம் - 1 படம்
வி.வி.ரமணன்  - 1 படம்
தேவன்  - 1 படம்
ஆரூர்தாஸ் - 1 படம்
பீம்சிங் 1 படம்
கே.சங்கர் 1 படம்
.எல்.நாராயணன் - 1 படம்
ஆர். தேவராஜன்  1 படம்
பி.ஆர்.சோமு 1 படம்
வி. ராமசந்திர ராவ் 1 படம்
ஆர்.கோவிந்தராஜ் 1 படம்
மோகன் காந்திராமன் 1 படம்
ஆர்.விட்டல்1 படம்
லட்சுமி தீபக்1 படம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்1 படம்
கௌசிகன்1 படம்
ஜகந்நாதன் 1 படம்
வியட்நாம் வீடு சுந்தரம் 1 படம்
ஏ.கே.சுப்ரமணியம் 1 படம்
தேவ்ராஜ் - மோகன் 1 படம்
டி.ஆர்.ராமண்ணா1 படம்
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி 1 படம்
கே.எஸ்.பிரகாஷ் ராவ்1 படம்
எஸ்.ஏ. கண்ணன் 1 படம்
கோபு1 படம்
விந்தன் 1 படம்
வலம்புரி சோமநாதன் 1 படம்
வாலி 1 படம்
மருத்திரா 1 படம்
எம். எஸ். கோபிநாத் 1 படம்
என். வெங்கடேஷ் - 1 படம்
கார்வண்ணன்  1 படம்
சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 1 படம்



சோவுடன் ஜோடியாக நடித்தவர்கள் 

மனோரமா - 51 படங்கள்
சச்சு - 9 படங்கள்
எம்.பானுமதி- 2 படங்கள்
படாபட் ஜெயலட்சுமி- 3 படங்கள்
கீதாஞ்சலி  - 1 படம்
ஜோதி லட்சுமி  - 1 படம்
சி.ஐ.டி. சகுந்தலா - 1 படம்
ஜெயலலிதா- 1 படம்
புஷ்பமாலா- 1 படம்
சுகுமாரி- 1 படம்
கே.ஆர். விஜயா - 1 படம்
எம்.என்.ராஜம் 1 படம்
ரஜனி1 படம்
செளகார் ஜானகி - 1 படம்
வடிவுக்கரசி - 1 படம்
பி.ராதிகா - 1 படம்

Friday, January 25, 2019

சோ நடித்த திரைப்படங்கள்

1963

1) பார் மகளே பார்

1970

2) நடு இரவில் (1966யில் முடிந்து தாமதமாக வெளிவந்தது)

1966

3) தட்டுங்கள் திறக்கப்படும்
4) மறக்க முடியுமா?
5) தேன் மழை

1967
6) மனம் ஒரு குரங்கு
7) ஆலயம்
8) நினைவில் நின்றவள்
9) பெண் என்றால் பெண்
10) நான் யார் தெரியுமா?
11) கற்பூரம்

1968
12) கலாட்டா கல்யாணம்
13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
14) கண்ணன் என் காதலன்
15) பொம்மலாட்டம்
16) குழந்தைக்காக
17) கணவன்
18) டெல்லி மாப்பிள்ளை
19) ஒளி விளக்கு
20) லட்சுமி கல்யாணம்

1969
21) மகிழம்பூ
22) உலகம் இவ்வளவு தான்
23) அடிமைப் பெண்
24) ஆயிரம் பொய்
25) நிறை குடம்
26) கன்னிப் பெண்
27) அன்னையும் பிதாவும்
28) ஐந்து லட்சம்

1970
29) எங்க மாமா
30) மாட்டுக்கார வேலன்
31) தரிசனம்  
32) விளையாட்டுப் பிள்ளை 
33) என் அண்ணன்
34) தேடி வந்த மாப்பிள்ளை
35) சிநேகிதி
36) எங்கள் தங்கம்

1971
37) குமரிக் கோட்டம்
38) அருணோதயம்
39) முகமது பின் துக்ளக்
40) ரிக்ஷாக்காரன்  
41) சூதாட்டம்
42) தேரோட்டம்
43) யானை வளர்த்த வானம்பாடி மகன்
44) நீரும் நெருப்பும்
45) ஒரு தாய் மக்கள்

1972
46) சங்கே முழங்கு
47) மிஸ்டர் சம்பத்
48) புகுந்த வீடு
49) தெய்வ சங்கல்பம்
50) தவப் புதல்வன்
51) உனக்கும் எனக்கும்
52) தாய்க்கு ஒரு பிள்ளை
53) ஆசீர்வாதம்

1973
54) அலைகள்       
55) வாயாடி 
56) பெத்த மனம் பித்து
57) நல்ல முடிவு 
58) பிரார்த்தனை
59) கங்கா கௌரி  
60) வந்தாளே மகராசி
61) அன்புச் சகோதரர்கள்
62) காசி யாத்திரை
63) பொன்னூஞ்சல்
64) சூரியகாந்தி     
65) மலை நாட்டு மங்கை
66) வீட்டுக்கு வந்த மருமகள்    
67) வாக்குறுதி      
68) பொன்வண்டு      
69) ஸ்கூல் மாஸ்டர்   
70) பிள்ளை செல்வம்
71) மல்லிகைப் பூ
72) மனிதரில் மாணிக்கம்
73) ஷண்முகப்  ப்ரியா

1974
74) கல்யாணமாம் கல்யாணம்       
75) சிவகாமியின் செல்வன்
76) தங்கப் பதக்கம் 
77) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 
78) ஒரே சாட்சி    
79) ரோஷக்காரி  
80) மகளுக்காக
81) இதயம் பார்க்கிறது 
82) ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் 
83) தாய்ப் பாசம்

1975
84) சினிமாப் பைத்தியம்       
85) உங்க வீட்டுக் கல்யாணம்
86) சொந்தங்கள் வாழ்க 
87) பிஞ்சு மனம் 
88) அவன்தான் மனிதன்    
89) மேல் நாட்டு மருமகள்
90) தேன் சிந்துதே வானம்
91) யாருக்கும் வெட்கமில்லை    
92) உறவு சொல்ல ஒருவன்
93) பணம் பத்தும் செய்யும்
94) ஆண் பிள்ளை சிங்கம்
95) அந்தரங்கம்
96) அவளுக்கு ஆயிரம் கண்கள்

1976
97) உண்மையே உன் விலை என்ன?       
98) மேயர் மீனாட்சி
99) பேரும் புகழும் 
100) தாய் வீட்டு சீதனம் 
101) ரோஜாவின் ராஜா 

1977
102) அவன் ஒரு சரித்திரம்       
103) தனிக் குடித்தனம்
104) உன்னை சுற்றும் உலகம்
105) பலப் பரீட்சை 
106) ராசி நல்ல ராசி

1978
107) வாழ்த்துங்கள்                       
108) அவள் ஒரு அதிசயம் 
109) அன்னப்பூரணி
110) சக்கப்  போடு போடு ராசா 
111) இறைவன் கொடுத்த வரம் 
112) கருணை உள்ளம் 
   

1979
113) வேலும் மயிலும் துணை       
114) நாடகமே உலகம்
115) ஆறிலிருந்து அறுபது வரை 

1981
116) கழுகு        
117) துணைவி  

118) கடவுளின் தீர்ப்பு 

1982
119) வடைமாலை   
120) நம்பினால் நம்புங்கள்



1983
121) சாட்டை இல்லாத பம்பரம்    
122) அடுத்த வாரிசு

1984
123) நான் மகான் அல்ல
124) உள்ளம் உருகுதடி

125) தலையணை மந்திரம்  

1985
126) நவக்கிரக நாயகி

127) புதிய தீர்ப்பு

1986
128) கண்ணத் தொறக்கணும் சாமி


1987
129) இனிய உறவு பூத்தது

130) சின்னக்  குயில் பாடுது
131) ஆனந்த் 
132) மனிதன்     

1988
133) குரு சிஷ்யன்

1990
134) பாலம்  
135) உலகம் பிறந்தது எனக்காக
136) அதிசயப் பிறவி

1998
137) காதலா காதலா



சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8
1970 - 8
1971 - 9
1972 - 8
1973 - 20
1974 - 10
1975 - 13
1976 - 5
1977 - 5
1978 - 6
1979 - 3
1980 - 0
1981 - 3
1982 - 2
1983 - 2
1984 - 3
1985 - 2
1986 - 1
1987 - 4
1988 - 1
1989 - 0
1990 - 3
1998 - 1

Sunday, January 20, 2019

சோ இயக்கிய திரைப்படங்கள்

1971

1) முகமது பின் துக்ளக்

1972

2) மிஸ்டர் சம்பத்

1975

3) யாருக்கும் வெட்கமில்லை

1976

4) உண்மையே உன் விலை என்ன? 


சோ இயக்கிய படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1971 - 1
1972 - 1
1975 - 1
1976 - 1

Friday, January 18, 2019

சோ எழுதிய திரைப்படங்கள்

1966

1) தேன் மழை

1967
2) மனம் ஒரு குரங்கு
3) நினைவில் நின்றவள்


1968

4) நீலகிரி எக்ஸ்பிரஸ்
5) பொம்மலாட்டம்


1969

6) ஆயிரம் பொய்
7) நிறை குடம்

1971

8) முகமது பின் துக்ளக்

1972

9) மிஸ்டர் சம்பத்

1975

10) யாருக்கும் வெட்கமில்லை
11) பணம் பத்தும் செய்யும்

1976

12) உண்மையே உன் விலை என்ன? 



சோ எழுதிய படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 


1966 - 1
1967 - 2
1968 - 2
1969 - 2
1971 - 1
1972 - 1
1975 - 2
1976 - 1