Showing posts with label Screen Play. Show all posts
Showing posts with label Screen Play. Show all posts

Friday, January 25, 2019

சோ நடித்த திரைப்படங்கள்

1963

1) பார் மகளே பார்

1970

2) நடு இரவில் (1966யில் முடிந்து தாமதமாக வெளிவந்தது)

1966

3) தட்டுங்கள் திறக்கப்படும்
4) மறக்க முடியுமா?
5) தேன் மழை

1967
6) மனம் ஒரு குரங்கு
7) ஆலயம்
8) நினைவில் நின்றவள்
9) பெண் என்றால் பெண்
10) நான் யார் தெரியுமா?
11) கற்பூரம்

1968
12) கலாட்டா கல்யாணம்
13) நீலகிரி எக்ஸ்பிரஸ்
14) கண்ணன் என் காதலன்
15) பொம்மலாட்டம்
16) குழந்தைக்காக
17) கணவன்
18) டெல்லி மாப்பிள்ளை
19) ஒளி விளக்கு
20) லட்சுமி கல்யாணம்

1969
21) மகிழம்பூ
22) உலகம் இவ்வளவு தான்
23) அடிமைப் பெண்
24) ஆயிரம் பொய்
25) நிறை குடம்
26) கன்னிப் பெண்
27) அன்னையும் பிதாவும்
28) ஐந்து லட்சம்

1970
29) எங்க மாமா
30) மாட்டுக்கார வேலன்
31) தரிசனம்  
32) விளையாட்டுப் பிள்ளை 
33) என் அண்ணன்
34) தேடி வந்த மாப்பிள்ளை
35) சிநேகிதி
36) எங்கள் தங்கம்

1971
37) குமரிக் கோட்டம்
38) அருணோதயம்
39) முகமது பின் துக்ளக்
40) ரிக்ஷாக்காரன்  
41) சூதாட்டம்
42) தேரோட்டம்
43) யானை வளர்த்த வானம்பாடி மகன்
44) நீரும் நெருப்பும்
45) ஒரு தாய் மக்கள்

1972
46) சங்கே முழங்கு
47) மிஸ்டர் சம்பத்
48) புகுந்த வீடு
49) தெய்வ சங்கல்பம்
50) தவப் புதல்வன்
51) உனக்கும் எனக்கும்
52) தாய்க்கு ஒரு பிள்ளை
53) ஆசீர்வாதம்

1973
54) அலைகள்       
55) வாயாடி 
56) பெத்த மனம் பித்து
57) நல்ல முடிவு 
58) பிரார்த்தனை
59) கங்கா கௌரி  
60) வந்தாளே மகராசி
61) அன்புச் சகோதரர்கள்
62) காசி யாத்திரை
63) பொன்னூஞ்சல்
64) சூரியகாந்தி     
65) மலை நாட்டு மங்கை
66) வீட்டுக்கு வந்த மருமகள்    
67) வாக்குறுதி      
68) பொன்வண்டு      
69) ஸ்கூல் மாஸ்டர்   
70) பிள்ளை செல்வம்
71) மல்லிகைப் பூ
72) மனிதரில் மாணிக்கம்
73) ஷண்முகப்  ப்ரியா

1974
74) கல்யாணமாம் கல்யாணம்       
75) சிவகாமியின் செல்வன்
76) தங்கப் பதக்கம் 
77) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 
78) ஒரே சாட்சி    
79) ரோஷக்காரி  
80) மகளுக்காக
81) இதயம் பார்க்கிறது 
82) ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் 
83) தாய்ப் பாசம்

1975
84) சினிமாப் பைத்தியம்       
85) உங்க வீட்டுக் கல்யாணம்
86) சொந்தங்கள் வாழ்க 
87) பிஞ்சு மனம் 
88) அவன்தான் மனிதன்    
89) மேல் நாட்டு மருமகள்
90) தேன் சிந்துதே வானம்
91) யாருக்கும் வெட்கமில்லை    
92) உறவு சொல்ல ஒருவன்
93) பணம் பத்தும் செய்யும்
94) ஆண் பிள்ளை சிங்கம்
95) அந்தரங்கம்
96) அவளுக்கு ஆயிரம் கண்கள்

1976
97) உண்மையே உன் விலை என்ன?       
98) மேயர் மீனாட்சி
99) பேரும் புகழும் 
100) தாய் வீட்டு சீதனம் 
101) ரோஜாவின் ராஜா 

1977
102) அவன் ஒரு சரித்திரம்       
103) தனிக் குடித்தனம்
104) உன்னை சுற்றும் உலகம்
105) பலப் பரீட்சை 
106) ராசி நல்ல ராசி

1978
107) வாழ்த்துங்கள்                       
108) அவள் ஒரு அதிசயம் 
109) அன்னப்பூரணி
110) சக்கப்  போடு போடு ராசா 
111) இறைவன் கொடுத்த வரம் 
112) கருணை உள்ளம் 
   

1979
113) வேலும் மயிலும் துணை       
114) நாடகமே உலகம்
115) ஆறிலிருந்து அறுபது வரை 

1981
116) கழுகு        
117) துணைவி  

118) கடவுளின் தீர்ப்பு 

1982
119) வடைமாலை   
120) நம்பினால் நம்புங்கள்



1983
121) சாட்டை இல்லாத பம்பரம்    
122) அடுத்த வாரிசு

1984
123) நான் மகான் அல்ல
124) உள்ளம் உருகுதடி

125) தலையணை மந்திரம்  

1985
126) நவக்கிரக நாயகி

127) புதிய தீர்ப்பு

1986
128) கண்ணத் தொறக்கணும் சாமி


1987
129) இனிய உறவு பூத்தது

130) சின்னக்  குயில் பாடுது
131) ஆனந்த் 
132) மனிதன்     

1988
133) குரு சிஷ்யன்

1990
134) பாலம்  
135) உலகம் பிறந்தது எனக்காக
136) அதிசயப் பிறவி

1998
137) காதலா காதலா



சோ நடித்த படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 

1963 - 1
1966 - 4
1967 - 6
1968 - 9
1969 - 8
1970 - 8
1971 - 9
1972 - 8
1973 - 20
1974 - 10
1975 - 13
1976 - 5
1977 - 5
1978 - 6
1979 - 3
1980 - 0
1981 - 3
1982 - 2
1983 - 2
1984 - 3
1985 - 2
1986 - 1
1987 - 4
1988 - 1
1989 - 0
1990 - 3
1998 - 1

Friday, January 18, 2019

சோ எழுதிய திரைப்படங்கள்

1966

1) தேன் மழை

1967
2) மனம் ஒரு குரங்கு
3) நினைவில் நின்றவள்


1968

4) நீலகிரி எக்ஸ்பிரஸ்
5) பொம்மலாட்டம்


1969

6) ஆயிரம் பொய்
7) நிறை குடம்

1971

8) முகமது பின் துக்ளக்

1972

9) மிஸ்டர் சம்பத்

1975

10) யாருக்கும் வெட்கமில்லை
11) பணம் பத்தும் செய்யும்

1976

12) உண்மையே உன் விலை என்ன? 



சோ எழுதிய படங்கள் எண்ணிக்கை வருடவாரியாக 


1966 - 1
1967 - 2
1968 - 2
1969 - 2
1971 - 1
1972 - 1
1975 - 2
1976 - 1

Wednesday, January 16, 2019

சோவின் நாடகங்கள்

சோ நடித்த நாடகங்கள் 

1) கல்யாணி (1956)
2) தேன்மொழியாள் (1957)
3) If I get it? (1957)
4) Don't Tell Anybody (1958)
5) Why Not? (1959)
6) Wait and See (1961)
7) பெற்றால் தான் பிள்ளையா? (1961)
8) What for? (1962)
9) சொல்லித் தெரிவதில்லை (1962)
10) Quo Vadis? (1962)
11) Mind is a Monkey (1963)
12) Under Secretary (1964)
13) சம்பவாமி யுகே யுகே (1965)
14) The Whole Truth
15) Madras by Night (1966)
16) Is God Dead? (1967)
17) சரஸ்வதியின் செல்வன் (1967)
18) முகமது பின் துக்ளக் (1968)
19) Tea House of the August Moon (1969)
20) என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? (1970)
21) இன்பக் கனா ஒன்று கண்டேன் (1971)
22) சட்டம் தலை குனியட்டும் (1972)
23) யாருக்கும் வெட்கமில்லை (1973)
24) உண்மையே உன் விலை என்ன? (1974)
25) உறவுகள் இல்லையடி பாப்பா (1975)
26) வந்தே மாதரம் (1975)
27) வைதேகி காத்திருந்தாள் (1976)
28) ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் (1977)
29) சாத்திரம் சொன்னதில்லை (1980)
30) நேர்மை உறங்கும் நேரம் (1981)
மற்றும் பல...

சோ எழுதிய நாடகங்கள்

1) கோரக் கொலை (1953)
2) டாக்டர் வேஷதாரி (1956)
3) If I get it? (1957)
4) Don't Tell Anybody (1958)
5) Why Not? (1959)
6) Wait and See (1961)
7) What for? (1962)
8) Quo Vadis? (1962)
9) Mind is a Monkey (1963)
10) சாதல் இல்லையேல் காதல் (1964)
11) சம்பவாமி யுகே யுகே (1965)
12) Madras by Night (1966)
13) Is God Dead? (1967)
14) சரஸ்வதியின் செல்வன் (1967)
15) முகமது பின் துக்ளக் (1968)
16) என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? (1970)
17) இன்பக் கனா ஒன்று கண்டேன் (1971)
18) சட்டம் தலை குனியட்டும் (1972)
19) யாருக்கும் வெட்கமில்லை (1973)
20) உண்மையே உன் விலை என்ன? (1974)
21) உறவுகள் இல்லையடி பாப்பா (1975)
22) வந்தே மாதரம் (1975)
23) ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் (1977)
24) சாத்திரம் சொன்னதில்லை (1980)
25) நேர்மை உறங்கும் நேரம் (1981)

சோ இயக்கிய நாடகங்கள் 

1) What for? (1962)
2) Quo Vadis? (1962)
3) Mind is a Monkey (1963)
4) சம்பவாமி யுகே யுகே (1965)
5) Madras by Night (1966)
6) Is God Dead? (1967)
7) சரஸ்வதியின் செல்வன் (1967)
8) முகமது பின் துக்ளக் (1968)
9) என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? (1970)
10) இன்பக் கனா ஒன்று கண்டேன் (1971)
11) சட்டம் தலை குனியட்டும் (1972)
12) யாருக்கும் வெட்கமில்லை (1973)
13) உண்மையே உன் விலை என்ன? (1974)
14) உறவுகள் இல்லையடி பாப்பா (1975)
15) வந்தே மாதரம் (1975)
16) ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் (1977)
17) சாத்திரம் சொன்னதில்லை (1980)
18) நேர்மை உறங்கும் நேரம் (1981)

Monday, November 12, 2018

சட்டம் தலை குனியட்டும்

1972யில் மேடையேறிய இந்நாடகம் சோவின் சிறந்த அரசியல் நாடகங்களில் ஒன்று.

"ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும் போதும் என் தொகுதியிலே போட்டி போடற எல்லாக் கட்சிக்காரர்களையும் பார்க்கும் போது எனக்கு ஒரு நிம்மதி வருது. எல்லாக் கட்சி கேண்டிடேட்சைப் பத்தியும் யோசிப்பேன். என்ன ஆனாலும் சரி இத்தனை பேர்லே ஒரே ஒரு ஆள்தானே ஜெயிக்க முடியும், எம்.பி. ஆக முடியும். பார்த்துக்கலாம்னு ஒரு நிம்மதி. அத்தனை கேண்டிடேட்சும் ஜெயிக்கற மாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா என்னை மாதிரி பொது மக்கள் கதி என்ன?"

இப்படி பல கூர்மையான யோசிக்க வைக்கக் கூடிய வசனங்கள். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட வசனங்களே.

லட்சுமிபதி என்ற வக்கீல் பணம் இருப்பவன் (அரசியல்வாதி), பணமில்லாதவன் ஆகியோருக்கு இடையே சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஓர் ஏழை சந்தர்ப்ப வசத்தால் செய்த குற்றங்களுக்கு விரைவாகத் தண்டனை தீர்ப்பகிறது. ஆனால் ஓர் அரசியல்வாதி செய்த குற்றங்களுக்கு அவர் மீது விசாரணைக் கமிஷன் மட்டுமே வருகிறது. அதை அவர் எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்துகிறார். ஓர் இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுகிறார். நேர்மையான லட்சுமிபதியையும் சாலை விபத்தில் கொன்று விடுகிறார். இத்தகையான சம்பவங்களால் சட்டமே தலை குனிய வேண்டும் என்பதே கதை முடிவு.

லட்சுமிபதியின் கதாபாத்திரம் இன்னும் சற்று கனமாக அமைத்திருக்கலாம். வந்தே மாதரம் வக்கீலைப் போல அலட்சியமாக நடந்து கொள்பவராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரே புகழுக்காக முன்பு அந்த அரசியல்வாதிக்கு  ஆஜராவது அவருடைய கதா பாத்திரத்தை முழுமையாக நாம் ஆதரிப்பதைத் தடுக்கிறது. 

Thursday, September 7, 2017

முகமது பின் துக்ளக் திரைப்படம்

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்துக்கு 1971யில் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் -

"எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும். இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக். அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்."

1968யில் மேடையேறி பெரும் வெற்றியடைந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமே 5 மார்ச் 1971யில் வெளியான இப்படம். இரு பெரும் திராவிடக் கட்சித் தலைவர்கள் இப்படம் வெளி வருவதை முடிந்த வரை தடுத்தனர் எனக் கேள்வி. முதலில் ஒப்புக்கொண்ட சில நடிகர்கள் பின்பு நடிக்க மறுத்தனர். கேமராமேன்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, 26 முறைகள் மாறினார்கள். மனசாட்சிக்குப் பயந்த எம்.எஸ்.விசுவநாதன் யாருக்கும் பணியாமல் இப்படத்துக்கு இசை அமைத்தார்.  

சென்ஸார் சான்றிதழ் வாங்குவதிலும் சிக்கல். பத்தாயிரம் பேர்களைத் தந்தி கொடுக்க செய்து சான்றிதழ் வாங்கினார் சோ. இருந்தாலும் 22 இடங்களில் வெட்டு. தயாரிப்பாளர் வேண்டுகோளால் சோ அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார். 

இப்படம் சோ இயக்கிய முதல் படம். இது சோ நாயகனாக நடித்த முதல் படம். படம் முடியும் தறுவாயில் அவருடைய கேரக்டர் வில்லத்தனமாகவும் மாறும். மஹாதேவன் மற்றும் துக்ளக் என இரு வேடங்கள் சோவுக்கு. கதை வசனமும் சோ.

இப்படத்தின் கதை, வசனம், நையாண்டி, நடிகர்களின் நடிப்பு, அரசியல் கருத்து போன்ற அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே நாடகத்தின் விமர்சனத்தில் எழுதி விட்டேன். அதனால் அவற்றைப் பற்றி மீண்டும் இதில் எழுதப் போவதில்லை.

நாடகத்தை விட படம் சற்று நீளம். இரண்டு தேவையற்ற பாடல்கள் படத்தில் உண்டு. மகாதேவனும் அவருடைய நண்பனும் ஒரு தேசப் பக்தரின் தூண்டுதலாலேயே துக்ளக்காகவும், இபுன் பதூதாவாகவும் வேடம் போடுவதும், அந்த தேசப் பக்தருடைய பேராசை பிடித்த மகளாக மனோரமாவின் காட்சிகளும் நாடகத்தில் கிடையாது. கடைசியில் இபுன் பதூதா மக்களிடம் கல்லடிப்பட்டு இறக்கும் படி துக்ளக் மக்களைத் தூண்டுவதும் படத்தில் வரும் புது காட்சி. சில வசனங்கள் நாடகத்தில் கிடையாது. ஈ.வெ.ராவைப் பற்றியும் வெங்காயத்தைப் பற்றியும் நாடகத்தில் வரும் வசனங்கள் படத்தில் இல்லை.

நாடகத்தில் நடித்த கேரக்டரிலேயே சோ, சுகுமாரி, அம்பி, நீலு ஆகியோர் நடித்துள்ளார்கள். இபுன் பதூதாவாக பீலிசிவம், ஒரு காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி, கனமான பாத்திரத்தில் மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான தைரியமான முயற்சி. தமிழில் பார்க்க வேண்டிய நூறு படங்களை வரிசைப்படுத்தினால் இப்படத்துக்கு கண்டிப்பாக ஓரிடம் உண்டு.

Friday, August 18, 2017

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

நாடக உலகத்தில் முதன்முதலாக காலைக் காட்சி வைத்தது விவேகா பைன் ஆர்ட்ஸ் தான். 1970யில் முதலில் மேடையேறிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஆடிட்டோரியத்தில் நான்கு காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இக்கால கட்டத்தில், சஃபையர்  தியேட்டரில் ஒரு வருடம் முழுவதும் இந்த நாடகமும் சோவின் ஏனைய நாடகங்கள் மட்டுமே காலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

"முகமது பின் துக்ளக்கை" விடவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாடகத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றன. சிவாஜி கணேசன் இந்நாடகத்தில் வரும் யமன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டார்.

இந்திரா காந்தியையும், அவருடைய சோஷலிச கொள்கைகளையும் நையாண்டி செய்த இந்நாடகம், அக்கால கட்டத்தில் இந்திராவுடன் கூட்டணியில் இருந்த தி.மு.. தலைவர் கருணாநிதியைக் கோபம் கொள்ள வைத்தது. அவர் சோவைத் தாக்கி "நானே அறிவாளி" என்ற நாடகத்தை எழுதினார் எனக் கேள்வி.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை இந்நாடகம் அரங்கேறியது. அப்போது வேலை நிமித்தமாக சோவால் நேரத்துக்கு வர முடியவில்லை. அதனால் அவர் நடித்த நாரதர் வேடத்தை இன்னொரு நடிகர் ஏற்றார். ஆனால் ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் இரவு 8:30 மணிக்குச் சோவே வந்து நாடகம் திரும்பவும் ஆரம்பிக்கும் வரை எல்லா ரசிகர்களும் பொறுமையாகக் காத்திருந்தனர். நாடகம் முடியும் போது மணி இரவு 11. அது தான் சோவின் சக்தி. யார் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், நாடக உலகின் முடி சூடா மன்னன் சோதான்.

இந்நாடகத்து எவ்வளவு இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகளைச் சில காட்சிகள் செய்தன. மேடையில் முட்டை வீசப்பட்டது. அரங்கத்துக்குள் கலாட்டா நடந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி இந்நாடகம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நாடகம் அந்தக் காலகட்டத்து அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதப்பட்டது என்றாலும் எந்தக் காலகட்டத்திலும் அதை ரசிக்கும்படியும் புரிந்து கொள்ளும்படியும் வைத்திருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றி.

ஓர் அரசியல்வாதி தேவ லோகம் சென்று மக்களாட்சிக் கொள்கையைப் பரப்பி அனைத்து மேலுலக மக்கள் அறிவையும் மயக்கி அவர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் கதை. ஒரே அரசியல்வாதிகளால் சர்வ வல்லமை படைத்த தேவர்களை ஆட்டி வைக்க முடிகிறதென்றால், இத்தனை அரசியல்வாதிகளும் ஒரு சேர சக்தியில்லாத மக்கள் படும் பாடு அளவிட முடியாத கொடுமை என்பதை உணர்த்தும் நாடகம்.

நாரதராக சோ, அரசியல்வாதி நல்லதம்பியாக அம்பி, யமனாக நீலு - வசனங்கள் தூள்; Cho's satire at his best.

இந்திரனை ஜனாதிபதியாக்கி டம்மி ஆக்குவதன் மூலம் ஜனாதிபதியின் செயல்பாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் ஏட்டளவு உரிமைகைளையும் சோ கிண்டலடிக்கிறார். யமன் தேர்தலில் நிற்க குபேரன் செலவழிக்கிறான். கடைசியில் குபேரன் சொத்தெல்லாம் போய் குசேலனுக்கு இணையாகிறான். இது தான் சோஷலிசம் எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர். திலோத்தமை ஓரணியிலும், ரம்பை இன்னோர் அணியிலும் தேர்தல் பிரசாரம் செய்வது இக்காலத்து நடிகர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குபேரன் சொத்தை நல்லதம்பி நாட்டுடமை ஆக்குகிறான்; விஷ்ணுவின் சங்கு, சக்கரத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிறான்; இது இந்திரா காந்தியின் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதைச் சாடும் காட்சிகள். கடைசியில் காந்தியே வருகிறார். அவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஆகிறது.


ஒரு காட்சியில் நேரு நாரதரிடம் கேட்கிறார், நாட்டின் இந்த கதிக்கு யார் காரணமென. நாரதரின் பதில் - "இந்திரா". நேரு அதிர்ச்சியடைய, தாம் இந்திரனை அழைத்ததாக நாரதர் சமாளிக்கிறார். இக்காட்சியில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரம் செய்திருப்பார்கள் எனக் கற்பனை செய்ய முடிகிறது.