எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 மே 1973யில் வெளி வந்த படம் இது. சொக்கலிங்கம் என்ற குடிகாரன் பாத்திரத்தில் சோ நடித்துள்ளார். மனோரமா இரண்டு வேடங்கள். அதில் ஒருவர் சோவுக்கு ஜோடி. முழு நீள நகைச்சுவைப் படம். ஆனால் சோவுக்கு சப்போர்டிங் கேரக்டர் தான். வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், ஸ்ரீகாந்த் ஆகியோரே கதாநாயகர்கள். எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர். சோ வரும் காட்சிகளும் நல்ல கலகலப்புடன் உள்ளன. அரசியல் நையாண்டிகளுக்குப் பஞ்சமில்லை.
ஹனுமான் பக்தரான வி.கே.ஆர். தம்முடைய மருமக்களான குமாரி பத்மினியையும் ஸ்ரீகாந்தையும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ அனுமதிக்கவில்லை. சுருளி ராஜன் உதவியுடன் வி.கே.ஆர். மனம் எப்படி மாற்றப்படுகிறது என்பதே கதை.
வாசுவும் மனோரமாவும் வில்லன்கள். ஜெயா, தேங்காய் சீனிவாசன், காந்திமதி, டைப்பிஸ்ட் கோபு எனப் பெரிய நகைச்சுவை நடிகர் பட்டாளம் படத்தில் உண்டு.

No comments:
Post a Comment