1958யில் இதே பெயரில் பி.ஆர்.பந்துலு இயக்கிய கன்னடப் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பந்துலு இதை இயக்கி 25 அக்டோபர் 1973யில் வெளியிட்டார்.
ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, முத்துராமன், நம்பியார், அசோகன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ராஜஸ்ரீ ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.
படம் சோகமயம். ஸ்கூல் ஹெட் மாஸ்டரான ஜெமினி தீக்கிரையான பள்ளிக்கூடத்தை மாணவர்களை வைத்தே மீண்டும் காட்டுகிறார். பணக் கஷ்டத்தின் நடுவில் அவருடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இவர் ரிட்டயர் ஆனபின் பிள்ளைகள் இவரைக் கவனிக்க மறுக்கிறார்கள். பெண்டாட்டியைப் பிரிந்து அல்லலுறுகிறார். கடைசியில் அவரிடம் படித்த முத்துராமனால் கரையேறுகிறார்.
சென்டிமென்டலான கதையின் ஒரே ஆறுதல் சோவுடைய நகைச்சுவை. சோனாசலம் என்கிற சோ என்பது அவருடைய பாத்திரப் பெயர். ஆசிரியராக வருகிறார். மறைமுகமான அரசியல் தாக்குதல்கள் அவருடைய வசனங்களில் காணப்படுகின்றன. நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை.
No comments:
Post a Comment