மோகன் காந்திராமன் இயக்கிய இப்படம் மிகவும் சுமார் ரகம். 8 செப்டம்பர் 1973யில் வெளியானது. இப்படத்தில் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சோ தோன்றுகிறார். நாயகியுடைய அண்ணன்; மனோரமா ஜோடி. நகைச்சுவை சுமார்தான். ஒரு சில வசனங்கள் மட்டும் நன்றாக உள்ளன.
வி.எஸ்.ராகவனும் மேஜர் சுந்தர்ராஜனும் கள்ளக் கடத்தல்காரர்கள். தம்மைப் பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் அசோகனைச் சுட்டு கொள்கிறார் மேஜர். பதிலுக்குப் போலீஸ் சுட, துப்பாக்கியால் சுடப்படும் ராகவன் தமது மகனை வளர்க்கும்படி மேஜரிடம் வாக்குறுதி வாங்குகிறார். ஆனால் அச்சிறுவனை எங்கோ அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு, ராகவன் கொடுக்கும் பணத்தில் வேறு ஊருக்குப் போய் பெரிய பணக்காரராகிறார் மேஜர். அவருடைய மனைவி அஞ்சலிதேவி.
நிர்மலாவும் சோவும் மேஜருடைய மக்கள். நிர்மலா கார் மெக்கானிக் ஜெய்சங்கரைக் காதலிக்கிறார். அவர் பிற்பாடு மேஜரிடம் டிரைவராக வேலையில் அமர்கிறார். தாம் தான் ராகவனுடைய மகன் என்றும் அவரைக் கொன்றவனைப் பழி வாங்குவதே தனது லட்சியம் என்கிறார் ஜெய். பெயரை மாற்றி வாழும் மேஜர் இதனால் கலவரமடைகிறார். ஜெய்யைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் முடியவில்லை.
கடைசியில் ராகவன் உயிருடன் திரும்புகிறார். ஜெய். தாம் சி.ஐ.டி. என்றும் உண்மையில் அசோகனுடைய மகன் என்றும் சொல்கிறார். மேஜரைக் கைது செய்கிறார்.
தேங்காய் சீனிவாசனும் படத்தில் உண்டு.

No comments:
Post a Comment