1962யில் முதலில்
மேடையேறிய What for? என்ற நாடகம் சோவுடைய
ஐந்தாவது நாடகம். இந்நாடகத்தை இயக்கியவர்
கே.பாலசந்தர். சில டைமிங் ஜோக்குகள்
நன்றாக இருந்தாலும், கதை, அதுவும் முடிவில்
சில காட்சிகள் மிகவும் சுமார் ரகம்.
சுதாகர்
என்ற எழுத்தாளன் பானுமதி என்ற பெண்
மீது காதல் கொள்கிறான். தனக்குத்
திருமணம் நிச்சயம் ஆனதைக் கூறி அவனை
நிராகரித்து விடுகிறாள் பானு.
பானுவுக்குக்
கல்யாணம் ஆன பிறகு, அவளுடைய
கணவனான பசுபதியுடன் அவள் ஊருக்குப் போகும்போது,
தான் எழுதிய புத்தகத்தைக் கல்யாண
பரிசாகப் பசுபதியிடம் சுதாகர் கொடுக்கிறான். சுதாகருடைய
போட்டோகிராபர் நண்பன் கிரி விளையாட்டுத்தனமாக
சுதாகரும் பானுவும் சேர்ந்து இருப்பதைப் போன்ற ட்ரிக் படத்தை
எடுத்து அதை அந்தப் புத்தகத்தில்
வைத்திருப்பான். அது சுதாகருக்குத் தெரியாது.
அந்த
படத்தைப் பார்த்து தன்னுடைய மனைவியைத் தவறாக நினைக்கும் சுதாகர்,
அவளுடன் மனஸ்தாபம் கொள்கிறான். இதை அறியும் சுதாகர்
உண்மை என்ன என்பதை நிரூபிக்கும்
முயற்சியில் இறந்து போகிறான். ஆனால்
கடைசியில் உண்மையை எல்லாரும் தெரிந்து
கொள்கின்றனர். பசுபதி பானுவை ஏற்றுக்கொள்ள
தீர்மானிக்கிறான். ஆனால் பானு உயிரை
விட்டு விடுகிறாள்.
கிரியுடை
காதலியாக கிரிஜாவும் அவளுடைய தந்தையாக சார்லியும்
நடுநடுவே நகைச்சுவை டிராக்கில் கிரியுடன் தோன்றுகிறார்கள். கடைசி சில காட்சிகளில்
நடக்கும் சம்பவங்களில் இவர்களும் இன்னும் சில கதாபாத்திரங்களும்
பெரும் பங்கு வகிக்கின்றனர்.
தாம்
சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவோ
நம்பும் படியாகவோ சொல்ல தவறி விடுகிறார்
கதாசிரியரான சோ.
No comments:
Post a Comment