1959யில் மேடையேறிய
Why Not? சோ எழுதிய மூன்றாவது நாடகம்.
கே.பாலச்சந்தர் இயக்கிய நாடகம். அவருக்குத்
தெரியாமல் மேடையில் சோ பல வசனங்களை
இணைக்க, அதனாலேயே பாலச்சந்தருக்கு விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்
ஒத்துப் போகாமல் ஆனது.
இந்த
நாடகத்தில் ஒரு புதுமை. கூடு
விட்டு கூடு பாயும் கதை.
அது முடியுமா என எல்லா பாத்திரங்களும்
சந்தேகப்பட, ஏன் முடியாது என
கேட்டுக் கொண்டே பார்வையாளர்களிடமிருந்து ஒரு கதா
பாத்திரம் மேடையேறுமாம். பார்வையாளர்கள் ஒரு நிமிடத்துக்கு என்னவென்றே
புரியாமல் குழம்பிப் போவார்களாம்.
சோமசேகர்
காலேஜ் பிரின்ஸிபால். க்ஷய ரோகத்துக்கும், கூடு
விட்டு கூடு பாய்வதற்கும் அவர்
மருந்து தாயாரிக்கிறார். அவரைப் பொருளாதார ரீதியில்
ஆதரிக்கும் ராஜாபாதர், அவர் கண்டுபிடித்த க்ஷய
ரோக மருந்தை வியாபாரமாக்க விரும்புகிறான்.
ஆனால் சோமசேகர் அதை மக்களுக்குப் பயன்பட
வேண்டுமென நினைக்கிறார்.
ராஜாபாதர்
பணக்காரர் என்பதால் ராமலிங்கம் தம்முடைய மகள் சரோஜாவை அவருக்குத்
திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்
ராமலிங்கம். சரோஜாவோ தம்முடன் படிக்கும்
பத்ராசலத்தைக் காதலிக்கிறாள்.
பத்ராசலம்,
சரோஜா, சோமசேகருடைய மகளான சுலோசனா, வேதா,
வாஞ்சி ஆகியோர் சோமசேகர் வேலை
செய்யும் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிறார்கள். சுலோசனாவும் ப்ரபசர்
மோகனும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள்.
ஒரு
கட்டத்தில் சோமசேகருக்கும் மோகனுக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. ராஜாபாதரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாத சரோஜா
தற்கொலை செய்து கொள்ள, அவள்
உடலில் புகுந்து விடுகிறார் சோமசேகர். இதற்கிடையே சோமசேகரை கொலை செய்ய வரும்
ராஜாபாதர், அவர் இறந்து விட்டதாக
நினைத்து, அந்தப் பழியை மோகன்
மீது போடுகிறார்.
சரோஜா
உடலில் இருக்கும் தாம் சோமசேகர் என்பதை
நிரூபிக்க எவ்வளவு முயன்றும் சோமசேகரால்
முடியவில்லை. யாருமே அவரை நம்பவில்லை.
படாத பாடு பட்டு கடைசியில்
யார் உண்மையான குற்றவாளி என்பதை போலீசிடம் நிரூபிக்கிறார்.
ஆனால் சரோஜா உடம்பில் இருக்கும்
அவரை ராஜாபாதர் சுட்டு விடுகிறான். மருந்தைக்
குடிக்க முயற்சிக்கிறார்; ஆனால் அசட்டுக் கல்லூரி
மாணவர்கள் அதைக் கை தவறி
உடைத்து விடுகிறார்கள். அவர் இறந்து போகிறார்.
இந்த
நாடகத்தில் சோ எந்த கேரக்டரில்
நடித்தார் எனத் தெரியவில்லை. அரசியல்
கலப்பு இன்றி அதே சமயம்
தாம் சொல்ல வரும் கருத்தை
நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் சோ.
வசனம் தூள். இதை ஏன்
சோ மீண்டும் 90களில் மேடையேற்றவில்லையோ?
No comments:
Post a Comment