Friday, August 11, 2017

ஐந்து லட்சம்

மிகவும் சுமாரான படம். சோ ரங்கு என்ற கேரக்டரில் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார். மனோரமா ஜோடி. சோவின் நகைச்சுவை நன்றாக இருந்தாலும் படம் சொல்லும்படியாக இல்லாததால், அது வெகுவாக எடுபடவில்லை.

ஜெமினி கணேசன் நாயகன். சரோஜா தேவி நாயகி. தேங்காய் சீனிவாசன், சச்சு, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன் போன்றோரும் நடித்துள்ளனர். 1969 நவம்பரில்  வெளிவந்த இப்படத்தை ஜி. ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

பெண் பெயரில் சரோஜா தேவியை பேனா நண்பராக்கும் ஜெமினி, பிறகு உண்மை தெரிந்து சரோஜா ஊடல் செய்யஅவரைச் சமாதானம் செய்து எப்படி திருமணம் செய்கிறார் என்பதே கதை.


சோ ஜெமினிக்கு படம் முழுவதும் உதவிகள் செய்யும் நண்பராக வருகிறார். தேங்காய் சீனிவாசன் ஒரு பண்ணையார் மகன். அவருக்குக்  கடன் அடைக்க ஐந்து லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதைத் தமது மகனைத் திருமணம் செய்யும் பெண்ணிடமிருந்து வரதட்சிணையாக வாங்க முயல்கிறார். ஆனால் தேங்காய் ஏழையான ஜெமினியுடைய தங்கையான சச்சுவைக் காதலிக்கிறார். கடைசியில் ஜெமினி அதைத் திரட்டிக் கொடுக்கிறார். அதற்கு அவர் செய்யும் முயற்சி, பொய்கள் என கதை போகிறது.

No comments:

Post a Comment